கண்ணா, "தாத்தா" கெட்டப் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. விறுவிறு "கபாலி"
கபாலி படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆரம்பத்தில் வயதான கெட்டப்பில் நடித்த ரஜினி, இப்போது நடுத்தரத் தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
கலைப்புலி தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே சென்னையில் கடந்த செப்டம்பரில் தொடங்கியது.

மலேசியாவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு படுவிறுவிறுப்பாக நடந்தது. இந்தப் படப்பிடிப்பின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ரஜினியைச் சந்தித்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் சில வார இடைவெளியில் ரஜினி - ஷங்கரின் கனவுப் படமான 2.ஓ படம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. கபாலிக்காக வைத்திருந்த தாடியை அகற்றிவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் ரஜினி.
இப்போது கபாலியின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இப்போது படமாக்கப்படும் காட்சிகளில் ரஜினி நடுத்தர வயது தோற்றத்தில் காணப்படுகிறார். அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
அவற்றில் ஒன்றில் கபாலியில் தனக்கு வில்லனாக நடிக்கும் நடிகரோடு உள்ளார் ரஜினி. மற்றொன்றில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஓரத்தில் சேரில் அமர்ந்தபடி தனக்கான வசனங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் கபாலி ஷூட்டிங் முழுமையடைகிறது.


Click it and Unblock the Notifications











