twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி எல்லா மொழிகளிலும் 'சோலோ' ரிலீஸ்.. போட்டிக்கு வேறு படங்களே இல்லை!

    By Shankar
    |

    சென்னை: கபாலி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு இது.

    சர்வதேச அளவில் எந்த ஒரு இந்தியப் படமும் இப்படி ஒரு பரபரப்பைக் கிளப்பியதில்லை.

    படத்தின் ரிலீஸ் தேதி என்ன? என்பதுதான் பலர் மனதிலும் உள்ள கேள்வி. ரசிகர்கள் சமூக வலைத் தளங்களிலும் வாட்ஸ்ஆப் குழுக்களிலும் இதைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இதுவரை எந்த இடத்திலும் ரிலீஸ் தேதி பற்றி மூச்சு விடவில்லை. சென்சார் முடியும் வரை நான் தேதி சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.

    இன்று

    இன்று

    இந்த சூழலில் கபாலி இன்று மாலை தணிக்கை செய்யப்படுகிறது. மாலை 7 மணிக்குப் பிறகு தணிக்கைச் சான்றிதழ் பெற்றதும் கபாலி ரிலீஸ் தேதியை தாணு அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டி இல்லை

    போட்டி இல்லை

    கபாலி வரும் ஜூலை 22-ல் வெளியாகும் என்றுதான் பலரும் கூறி வருகின்றனர். அந்தத் தேதியில் வெளியானால், எந்த மொழியிலும் கபாலிக்கு போட்டியாக படங்களே இல்லை. ஹாலிவுட் படங்களான ஐஸ் ஏஜ், ஸ்டீபன் ஸ்பீல்பெர் படங்களெல்லாம் கபாலிக்காக ஒரு வாரம் முன் அல்லது பின் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    அரங்குகள்

    அரங்குகள்

    உலகளவில் 5000 அரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கபாலி வெளியாகிறது. வட இந்தியாவில் இந்தி மொழியில் 1000 அரங்குகளில் கபாலி வெளியாகிறது.

    மலேசியா

    மலேசியா

    தமிழகத்துக்கு இணையாக இந்தப் படத்தை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர் அந்த நாடுகளின் விநியோக உரிமை பெற்றவர்கள். குறிப்பாக மலேசியாவில் எங்கே பார்த்தாலும் கபாலி மயம்தான்.

    English summary
    Rajinikanth's Kabali movie will be censored Today evening. After the censor, Thaanu will announce the release date.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X