»   »  கபாலி டீசர் ரிலீஸுக்கு முன் திருவேற்காடு கோவிலில் ஸ்பெஷல் பூஜை போட்ட தாணு

கபாலி டீசர் ரிலீஸுக்கு முன் திருவேற்காடு கோவிலில் ஸ்பெஷல் பூஜை போட்ட தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் முதல் டீசர் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது.

டீசர் வெளியீட்டையொட்டி இன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.


பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்துள்ள கபாலியை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.


Kabali Teaser Today

இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இல்லாத அளவு பெரும் எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்துக்கு உருவாகியுள்ளது. இதுவரை படத்தின் நான்கு டிசைன்கள் மட்டுமே  வெளியான நிலையில், இன்று ஒரு நிமிட முதல் டீசர் வெளியானது.


இந்த டீசரை கலைப்புலி தாணு தனது அதிகாரப்பூர்வ யுட்யூப் தளத்தில் வெளியிட்டார்.வெளியிடுவதற்கு முன் தனது இஷ்ட தெய்வமான திருவேற்காடு கருமாரியம்மன்
கோயிலுக்குச் சென்று டீசரை வைத்து வழிபட்டார் தாணு.


ஏராளமான ரஜினி ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே கபாலி டீசர் பற்றி ட்விட்டரில் #KabaliTeaserCelebrationBegins #Kabali #KabaliTeaser என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

Read more about: kabali, rajini, ரஜினி
English summary
Rajinikanth's Kabali Teaser will be released officially Today by Kalaipuli Thaanu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil