கபாலி... டிக்கெட்டுகள் காலி.. முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் கடும் போட்டி!!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "கபாலி' படத்தின் டிக்கெட் முன் பதிவு நேற்று நள்ளிரவில் உலகம் முழுவதும் தொடங்குகிறது.
டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமைதான் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே 'ஆன்லைனில்' ரசிகர்களின் முன் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஆர்வம்
"கபாலி' திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதால், முன்பதிவு செய்வதில் ரஜினி ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

நான்கு நாட்களுக்கு
முதல் நாள் மட்டுமல்ல, முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து அரங்குகளிலும் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. சத்யம் குழுமத்தில் மட்டும் 26 அரங்குகளில் கபாலி படம் வெளியாகிறது. இந்த 26 அரங்குகளிலும் கபாலியின் முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

பிற பகுதிகளில்
தமிழத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலை. இந்தியா தவிர உலகின் பிற நாடுகளில் கபாலியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

4 மொழிகளில்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலியை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











