twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி தமிழ்நாட்டு வசூல் ரூ 100 கோடியை எட்டியது... தமிழ் சினிமா சரித்திரத்தில் புதிய சாதனை!

    By Shankar
    |

    ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படமான கபாலியின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடிகளைத் தாண்டியுள்ளது.

    நூறாண்டு தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்தத் தமிழ்ப் படமும் தமிழக எல்லைக்குள் மட்டும் இத்தனை கோடிகளை வசூலித்ததில்லை. அந்த வகையில் சரித்திரம் படைத்துள்ளது கபாலி.

    கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது. இன்றோடு மூன்றாவது வாரத்தைத் தாண்டுகிறது.

    Kabali all time record in Tamil Cinema Box office

    இந்தப் படத்தின் வசூல் குறித்து முழுமையான வெளிப்படையான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்கள் அனைத்துமே சாதாரண டிக்கெட் விலை மற்றும் போடப்பட்ட காட்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டவை.

    ஆனால் ரஜினி படத்தைப் பொறுத்தவரை இந்த கணக்கீடுகள் தவறானவை. காரணம், முதல் மூன்று தினங்களில் அத்தனை டிக்கெட்டுகளும் குறைந்தது ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 2500 வரை விற்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளிலுமே கபாலிதான் திரையிடப்பட்டது. ஆனால் வசூல் கணக்கு என்று காட்டியிருப்பது ரூ 120, 95, 90, 50, 40, 30, 10 டிக்கெட்டுகளைத்தான்.

    முதல் வாரத்தின் திங்கள்கிழமையிலிருந்துதான் டிக்கெட்டுகள் சாதாரண விலைக்கு விற்கப்பட்டன. இரண்டாவது வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே ஓடியது கபாலி. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் கபாலியின் தமிழ் நாட்டு வசூல் மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சாதாரண கட்டணங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வசூல் ரூ 100 கோடி. பல மடங்கு அதிக கட்டணத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளைக் கணக்கிட்டால், படம் எடுத்த தாணுவை விட, தியேட்டர்காரர்கள் அதிகமாகச் சம்பாதித்துள்ளனர் கபாலி மூலம். இவற்றைத் தாண்டி கேன்டீன் வசூல் தனி.

    தென்னிந்திய அளவில் தமிழ்நாடு தவிர்த்து பிற பகுதிகளில் கபாலி இதுவரை ரூ 76 கோடிகளை வசூலித்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் வாங்கிய விலையை விட மூன்று மடங்குக்கும் மேல் ரூ 31 கோடி வசூலித்துள்ளது கபாலி. கேரளாவில் ரூ 17 கோடிகள்.

    தெலுங்கில் முதல் இரண்டு வாரங்கள் பிரமாதமாக ஓடிய கபாலியின் வசூல் மூன்றாவது வாரத்தில்தான் குறைந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நிஜாம் பகுதியில் இன்னும் கபாலி திருப்தியான வசூலுடன் ஓடுவதாகக் கூறுகிறார்கள். இதுவரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 40.41 கோடியை கபாலி வசூலித்துள்ளது.

    வட இந்தியப் பகுதிகளில் வேறு எந்தத் தென்னிந்திய மொழிப் படத்துக்கும் கிடைக்காத அளவு ரூ 44 கோடி வசூல் கிடைத்துள்ளது கபாலியின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளுக்கு. குறிப்பாக கபாலி இந்தியை விட, சப் டைட்டிலுடன் கூடிய நேரடி தமிழ்ப் படத்துக்குத்தான் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்தியில் தானே சொந்தமாக ரிலீஸ் செய்தார் கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் ரூ 214 கோடிகளைக் குவித்துள்ளது கபாலி. இது 20 நாட்கள் கணக்கு.

    சர்வதேச அளவில் கபாலியின் உண்மையான வசூல் இந்தியா சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரால் மட்டுமே இது சாத்தியம் என்கின்றன வட இந்திய ஊடகங்கள். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் கபாலி மூன்றாவது வாரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் இதுவரை எந்தப் படமும் வசூலிக்காத அளவு ரூ 26 கோடிகளைக் குவித்துள்ளது.

    மூன்று வாரங்களில் சர்வதேச அளவில் கபாலி மொத்தம் 20 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இது தியேட்டர்களின் மூலம் மட்டுமே கிடைத்த வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajinikanth's Kabali movie has crossed Rs 100 cr in Tamil Nadu alone with in 20 days of its release and it considered as the milestone in Tamil cinema history.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X