தல படத்துல செஞ்ச அதே வேலையை இப்போ கமல் படத்திலேயும் செய்கிறார்: கபிலன் வைரமுத்து
இந்தியன் 2 திரைப்படத்திற்கு கபிலன் வைரமுத்து ஒப்பந்தமாகியுள்ளார்
சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன் வைரமுத்து இருப்பது உறுதியாகியுள்ளது.
ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்க உள்ளனர்.

இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்திற்காக எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் லஷ்மி சரவணக்குமார் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான கபிலன் வைரமுத்துவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கபிலன் வைரமுத்து கவண் மற்றும் விவேகம் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.
இந்தியன் 2 திரைப்படத்தில் லொகேஷன் வேலைகள் முடிந்து கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. போலந்து மற்றும் உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். வழக்கம்போல இப்படத்திலும் கமலுக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்பட உள்ளது.
இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் அனிருத் இசையமைக்கிறார். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











