twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இது கோலு மாலு குளோபலைசேஷன்...'- மோடி சர்க்காரை வெளுத்து எடுக்கும் கபிலன் வைரமுத்து!

    By Shankar
    |

    காந்தி நோட்டு ரெண்டும்
    அம்பேலாகிப் போயாச்சு.. என்று தொடங்கும் தட்றோம் தூக்குறோம் படப் பாடல் ஆன்லைனில் வைரலாவிட்டது.

    இது சிம்பு பாடியதால் இன்னும் முக்கியத்துவம் பெற்றது. பாஜகவின் பப்ளிசிட்டியால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. நவம்பர் 8-ம் தேதி வெளியான இந்தப் பாடல் விரைவில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொடவிருக்கிறது.

    Kabilan Vairamuth blasts Modi govt in Demonetisation Anthem

    பாடிய சிம்புவுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆனால் பாடலை எழுதியவர் சிம்பு அல்ல. அது கபிலன் வைரமுத்துவின் சிந்தனை.

    பாடல் முழுக்க மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளை விட்டு வெளுத்திருக்கிறார் கபிலன்.

    பணமதிப்பிழப்பு, மல்லையா உள்ளிட்ட பெரு முதலைகள் வங்கிகளின் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியது, ஜிஎஸ்டி இம்சை என அனைத்தும் மக்களை பாடாய் படுத்துவதை பாடல் வரிகளாக்கியிருக்கிறார் கபிலன்.

    இந்த பணமதிப்பிழப்பால் பெரிய பாதிப்புக்குள்ளானவர்கள் ஏழைகள் நடுத்தர மக்கள். அவர்களின் வேதனையை இப்படிச் சொல்லியிருக்கிறார்:

    ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா
    குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா
    நாட்ட மாத்த வேணுமுனு நீங்க நெனச்சா
    கோட்டு போட்ட குண்டர்களின் சங்கப்புடிங்கடா

    -இப்படி பாடல் வரிகள் ஒவ்வொன்றுமே லோக்கல் தமிழில், ஆனால் சவுக்கால் அடிப்பது போல உள்ளது.

    அப்பா வைரமுத்து இலக்கிய நயத்தில் எள்ளல் செய்வதில் மன்னர் என்றால், மகன் கபிலன் பேச்சுத் தமிழில் எள்ளல் எழுதுவதில் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளார்.

    English summary
    Kabilan Vairamuthu's Demonetisation song is meaningful and blasting the union govt's economical activities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X