twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை கூடாது என்பதற்கு இவர்களே உதாரணம்!

    |

    சென்னை: பாடலாசிரியர் விவேக்கை சக கவிஞரான கபிலன் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

    புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை கூடாது என ஒரு வாக்கியம் உண்டு. கவிதையை தைய்ப்பவன் கவிஞன் அதனால் கவிஞனுக்கு கர்வம் அழகு என்றும் சொல்வார்கள்.

    மற்ற கவிஞரின் கவிதையைப் பார்த்து வியந்து பாராட்டுவதற்கு பதிலாக, "நானும் கவிஞனே... அதைவிட சிறப்பானக் கவிதையை என்னாலும் படைக்க முடியும்" என்று கவிஞன் எண்ணுவான் என சொல்லப்படுவதுண்டு. அதுபோல் கடந்த கால பாடலாசிரியர்களில் ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டது அரிதுதான். அப்படியே பாராட்டினாலும், பாராட்டுரை பாராட்டுப் பெறுபவரை விட சிறப்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

    இன்றைய சூழலில் இந்த நிலை மாறிவருகிறது. தற்போது சர்க்கார் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கை கபிலன் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

    சர்க்கார்

    சர்க்கார்

    சிம்டாங்காரன் பாடலைத் தொடர்ந்து இன்று மாலை "ஒரு விரல் புரட்சி" என்ற பாடல் வெளியிடப்பட்டது. வாக்களிக்கும் உரிமை, சரியான நபருக்கு வாக்களித்தல் உள்ளிட்ட பல சமுதாயக் கருத்துக்களை அப்பாடல் உள்ளடக்கியுள்ளது.

    ஜன கன மன

    ஜன கன மன

    சிம்டாங்காரன் பாடலைக்கேட்டு குழம்பிப்போன ரசிகர்கள், ஒரு விரல் புரட்சி ரிலீஸானதும், எப்படி ஆயுத எழுத்து திரைப்படத்தில் "ஜன கன மன.." பாடல் புரட்சி ஆந்தமாக கொண்டாடப்பட்டதோ அப்படி இந்த பாடலை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    "நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம்... ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்... மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்... போர்களைத் தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்..." போன்ற வரிகள் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படுகின்றன.

    பாராட்டு

    இந்த நிலையில், சக பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து "துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்.. அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம்..." என்ற வரியைக் குறிப்பிட்டு, "நிஜமான வரிகள்... நெஞ்சின் வரிகள்... வாழ்த்துக்கள் விவேக்! என்று ட்வீட் செய்துள்ளார்.

    வைரமுத்து

    வைரமுத்து

    வைரமுத்துவின் கவிதைகளையும், பாடல்களையும் அதிகம் விரும்பிப் படித்து பாடலாசிரியர் ஆனவர் விவேக். இன்று அவர் எழுதிய பாடலை, வைரமுத்துவின் மகன் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lyricist Kabilan Vairamuthu praised lyricist Vivek for Oru viral puratchi song from Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X