சர்வதேச விழாவில் சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் : கபிலன் வைரமுத்து பங்கேற்பு
வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாடமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவும் கவிஞர் ரவி சுப்ரமணியமும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
கொச்சி எர்ணாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் சர்வதேச புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் கருதப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications