twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுவுக்கு எதிராக கபிலன் வைரமுத்துவின் தனிப்பாடல்... டி.ராஜேந்தர் பாடுகிறார்!

    தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன் வைரமுத்து தனிப்பாடல் ஒன்றை உருவாக்குகிறார்.

    |

    Recommended Video

    மதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நிலவும் மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன் வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடலை டி.ராஜேந்தர் பாடுகிறார்.

    தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு விதமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும் கவிஞருமான கபிலன் வைரமுத்து, மதுவுக்கு எதிராக பாடல் ஒன்றை உருவாக்கிறார். இதை நடிகர் டி.ராஜேந்தர் பாடுகிறார். பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசையமைக்கிறார்.

    Kabilan Vairamuthus song against liquor

    இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

    கடந்த ஆண்டு வெளிவந்த 'கவண்' திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார்.

    கடந்த ஆண்டு கபிலன்வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார். மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடவிருக்கிறார்கள்.பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Poet Vairamuthu's son Kabilan Vairamuthu is making a song against liquor culture in tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X