மனைவிக்கு ஜடை பின்னிவிட்ட பிரபல இயக்குனர்: வைரலான வீடியோ
மும்பை: பாலிவுட் இயக்குனர் கபீர் கான் தனது மனைவிக்கு ஜடை பின்னிவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சல்மான் கானை வைத்து ஏக்தா டைகர், பஜ்ரங்கி பாய்ஜான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் கபீர் கான். அவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மினி மாதூரை திருமணம் செய்து ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பார்ட்டி ஒன்றில் கபீர் கான் தனது மனைவிக்கு ஜடை பின்னிவிட்டுள்ளார். அதை மினி மாத்தூரின் தோழி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த மினி மாத்தூர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டுள்ளார். அவ்வளவு பெரிய இயக்குனர் மனைவிக்கு ஜடை பின்னிவிட்டது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
க்யூட் தம்பதி என்று பலரும் வீடியோவை பார்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











