வாரிசு நடிகர் 300 பெண்களுடன் உறவு கொண்டது தப்பா தெரியல?: ஹீரோ பாய்ச்சல்

By Siva

Recommended Video

Actress Kiara Advani: சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார்?- வீடியோ

மும்பை: கபிர் சிங் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்துள்ள பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் சஞ்சு பற்றி பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி தான் கபிர் சிங்கையும் இயக்கினார். கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

Kabir Singh issue: Shahid Kapoor clarifies

பெண்களை தாக்குவது சரி என்று படத்தில் காட்டியதாக பிரச்சனை எழுந்துள்ளது. மேலும் காதலிக்கும் பெண்ணை நினைத்த நேரம் தொட, அறைய உரிமை இல்லை என்றால் அது என்ன உறவு என்று சந்தீப் வாங்கா ரெட்டி பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கபிர் சிங் கதாபாத்திரம் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து ஷாஹித் கபூர் கூறியிருப்பதாவது,

கபிர் சிங் போன்ற கதாபாத்திரங்களுடன் படங்கள் அண்மையில் வெளியாகின. ஆனால் அதை எல்லாம் யாருமே குற்றம் சொல்லவில்லை. சஞ்சு படத்தில் ஹீரோ தனது மனைவியின் முன்பு அமர்ந்து தான் சுமார் 300 பெண்களுடன் உறவு கொண்டதாக தெரிவித்த காட்சி இருந்தது. அந்த காட்சிக்கு எல்லாம் யார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கபிர் சிங் பற்றி மட்டும் குறை சொல்கிறார்கள்.

எனக்கு சஞ்சு படம் பிடிக்கவில்லை என்று கூறவில்லை. எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. கபிர் சிங் பெண்களுக்கு எதிராக செயல்படவில்லை என்பதே என் கருத்து என்கிறார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் தான் சஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் வாங்காவின் பேட்டியை பார்த்துவிட்டு பெண்ணியவாதிகளும், பிரபலங்களும் அவரை சமூக வலைதங்களில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சந்தீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சந்தீப் பற்றி விஜய் தேவரகொண்டா கூறியதாவது,

சந்தீப் பேசியது எனக்கு புரிகிறது. அதே போன்று அவர் பேசியதற்கு எதிர்ப்பவர்களின் நிலையும் புரிகிறது. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனிக்க யாரும் தயாராக இல்லை. சந்தீப் யாரையாவது காதலித்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கியிருக்கலாம் ஆனால் அவர்கள் காலித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள். அது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து கூறப்பட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X