கபீர் சிங் வெற்றியால் உச்சத்திற்குப் போன அர்ஜூன் ரெட்டி டைரக்டர் சந்தீப் ரெட்டி வங்கா

Recommended Video

Actor Shahid Kapoor: அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகியுள்ளது.

மும்பை: கபீர் சிங் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மீண்டும் இந்தியிலேயே ஒரு திரைப்படத்தை இயக்கபோவதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் வசூல் மழையையும் கொட்டியது.

Kabir Singh Success Sandeep Reddy Vanga Directs another Hindi Film

அதோடு இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் விஜய் தேவர கொண்டாவும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு என்றே தனியாக ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இந்த திரைப்படத்தையே இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் எடுத்தனர். இந்த திரைப்படத்தையும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இந்தி திரைத்துறையிலும் அறிமுகமானார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதோடு மட்டுமின்றி இந்த ஆண்டில் இந்தியில் அதிக வசூல் மழையை குவித்த திரைப்படங்களில் இந்த திரைப்படத்திற்குத்தான் முதலிடம். இதுவரையில் சுமார் 280 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இரண்டு மொழிகளில் ஒரே கதையைக் கொண்ட திரைப்படத்தை உருவாக்கி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் அடுத்து இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் தவமிருக்கின்றனர். ஆனால், இவர் மீண்டும் இந்தி திரைத்துறைலேயே ஒரு திரைப்படம் இயக்கவே விரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், மீண்டும் தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கினால் வருமானத்தில் ஐம்பது சதவீதம் தருவதாக கபீர் சிங் திரைப்படத்தைத் தயாரித்த சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முராத் கேதானி கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்தியில் மீண்டும் சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திரைப்படத்தை இயக்க சந்தீப் ரெட்டி வங்கா சம்மதித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு இந்தியின் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X