Kabir Singh Teaser: இதை யாராவது பாலாவுக்கு போட்டு காட்டுங்கப்பா
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகியுள்ளது.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சந்தீப் ரெட்டி வாங்காவே அந்த படத்தை ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோரை வைத்து ரீமேக் செய்துள்ளார்.
கபிர் சிங்
கபிர் சிங் படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி போன்றே இந்த படமும் தீயாக இருக்கும் என்று தெரிகிறது.
அருமை
அர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளார் சந்தீப் வாங்கா. ரசிகர்களுக்கு கபிர் சிங்கை மிகவும் பிடித்துவிட்டது.
ஷாஹித் கபூர்
கபிர் சிங் டீஸரை பார்த்தவர்கள் ஷாஹித் கபூரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஷாஹித் கபூர் இந்த படத்திற்காக தனது எடையை 14 கிலோ குறைத்தது வீண் போகவில்லை.
பாலா
அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் தான் ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கபிர் சிங் டீஸரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பாலாவுக்கு அதை போட்டுக் காட்டுமாறு கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











