கபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco
Recommended Video

சென்னை:பிஜிலி ரமேஷ் கலக்கும் கபீஸ்கபா பாடல் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண்ணாக நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கபீஸ்கபா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் டான்ஸ் ஆடுகிறார். தனது தலைவனை போன்றே தலைமுடியை சிலுப்பி ஸ்டைல் செய்கிறார்.
சமூக வலைதளங்களில் பிஜிலி ரமெஷ் டிரெண்டிங்கில் இருக்கும் நேரத்தில் அவரை கோலமாவு கோலிலா படக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளது. கபீஸ்கபா பாடல் வீடியோ வைரலாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய பாடலை படமாக்கப்பட்ட விதம் வித்தியாசமாக உள்ளது. பிஜிலியை இந்த பாடலுக்கு ஆட வைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. வீடியோவை பார்த்தவர்கள் பிஜிலி தலைவா என்கிறார்கள். ஒரு யூடியூப் வீடியோ மூலம் பிரபலமான பிஜிலி தற்போது நயன்தாரா படத்தில் நடித்துவிட்டார்.
பிஜிலியை பிரபல பத்திரிகைகள் கூட பேட்டி எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











