Kabzaa Box Office: கேஜிஎஃப் ரேஞ்சுக்கு பில்டப்.. கப்ஜா பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, சிவராஜ்குமார் மற்றும் கிச்சா சுதீப் நடிப்பில் இந்த வாரம் வெளியான கப்ஜா படம் பாக்ஸ் ஆபிஸில் ரொம்பவே சொதப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, காந்தாரா உள்ளிட்ட கன்னட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அதே பாணியில் வெளியான கப்ஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்யும் என பில்டப் கொடுக்கப்பட்டது.

ஆனால், படமே கேஜிஎஃப் படத்தின் சீப்பான காப்பி என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், படத்தின் வசூல் மொத்தமாக படுத்தே விட்டது என்கின்றனர்.

கப்ஜா கர்ஜிக்கவில்லை

கப்ஜா கர்ஜிக்கவில்லை

கன்னட படங்கள் வரிசையாக ஹிட் அடித்து வந்த நிலையில், இயக்குநர் சந்துரு இயக்கத்தில் பிரம்மாண்டமாக 120 கோடி பட்ஜெட்டில் உருவான கப்ஜா திரைப்படம் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், படத்தை பார்க்க கன்னட ரசிகர்கள் மத்தியில் கூட ஆர்வமே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மற்ற இடங்களில் படம் எந்தவொரு ஹைப்பையும் க்ரியேட் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

கேஜிஎஃப் காப்பி

கேஜிஎஃப் காப்பி

கேஜிஎஃப் திரைப்படம் ஹிட் அடித்த நிலையில், வரிசையாக அதே பாணியில் ஏகப்பட்ட படங்களை உருவாக்க முயற்சித்து தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில், கேஜிஎஃப் போலவே கப்ஜா படம் டிட்டோவாக காப்பி அடிக்கப்பட்டு இருந்தாலும், அந்த படத்தில் இருந்த எனர்ஜி இதில் மிஸ்ஸிங் என விமர்சனங்கள் குவிந்துள்ளன.

இரண்டாம் நாள் வசூல்

இரண்டாம் நாள் வசூல்

கப்ஜா திரைப்படம் முதல் நாளில் 14 கோடி வரை உலகளவில் வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை 10.5 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது. இதுவரை 2 நாட்களில் உலகளவில் 24.5 கோடி ரூபாய் வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை 15 கோடி வரை வசூல் வந்தால் 40 கோடி ரூபாய் வரை முதல் வாரத்தில் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎஃப் முதல் நாள் வசூல்

கேஜிஎஃப் முதல் நாள் வசூல்

கேஜிஎஃப் அளவுக்கு கப்ஜா படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த அளவுக்கு இல்லை என்றாலும் படத்தின் வசூல் முதல் வாரத்தில் நல்லாவே வந்துள்ளது என்கின்றனர். படத்தின் பட்ஜெட்டான 120 கோடி ரூபாயை இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் எடுத்தால் படம் ஹிட் என்கின்றனர். ஆனால், கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 134.5 கோடி வசூலும், கேஜிஎஃப் முதல் பாகம் முதல் நாளில் 25 கோடி வசூலும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. காந்தாரா படமே குறைவான பட்ஜெட்டில் வெளியாகி 400 கோடி வசூல் செய்த நிலையில், 120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X