Kabzaa Twitter Review: KGF, காந்தாரா படங்களை பின்னுக்குத் தள்ளியதா கப்ஜா? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் ஆர். சந்த்ரு இயக்கத்தில் உபேந்திரா நடிப்பில் உருவாகி உள்ள கப்ஜா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.

உபேந்திராவுடன் இணைந்து இந்த படத்தில் சிவராஜ் குமார் மற்றும் கிச்சா சுதீப் கேமியோவாக வந்து செல்கின்றனர். ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கன்னட திரையுலகில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மற்றும் காந்தாரா படங்களை பின்னுக்குத் தள்ளியதா? அல்லது விக்ராந்த் ரோணா போல சொதப்பியதா என்பது குறித்து ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னு இங்கே பார்ப்போம்..

கப்ஜா கதை

கப்ஜா கதை

சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய காலக் கட்டத்தில் அரகேஸ்வரா எனும் விமானப்படை வீரர் எப்படி அண்டர் வேர்ல்ட் டானாக மாறுகிறார் என்பது குறித்தும் அவரை பிடிக்க பார்கவ் பாக்‌ஷி எனும் போலீஸாரை பிரிட்டிஷ் அரசாங்கம் அனுப்புகிறது என்றும் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வென்றது யார் என்பது தான் இந்த கப்ஜா படத்தின் கதை.

சீப் வெர்ஷன் ஆஃப் கேஜிஎஃப்

சீப் வெர்ஷன் ஆஃப் கேஜிஎஃப்

படத்தை பாதியிலேயே விட்டுட்டு வெளியே வந்திடலாம் என்றே தோன்றியது. கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களை ஒன்றாக சேர்ந்து பார்த்தது போல உள்ளது. கேஜிஎஃப் படத்தின் சீப் வெர்ஷன் ஆக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். சிஜி காட்சிகள் சரியில்லை, கதை, திரைக்கதை, நடிப்பு என எதுவுமே வலுவாக இல்லை என இந்த நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவாண்ணா என்ட்ரி

சிவாண்ணா என்ட்ரி

கப்ஜா படம் தெறிக்குது என்றும் அதிலும், சிவராஜ்குமாரின் என்ட்ரி மிரட்டல் ரகம் என்றும் நிச்சயம் கேஜிஎஃப் படத்தை போல இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என இந்த ரசிகர் கப்ஜாவை கொண்டாடி உள்ளார். ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடித்து வரும் நிலையில், அவரது நடிப்பை பார்க்கவே ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

கிச்சா கேமியோ

கிச்சா கேமியோ

உபேந்திரா லீடு ரோலில் நடித்துள்ள கப்ஜா படத்தில் கிச்சா சுதீப்பின் கேமியோ காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் கொண்டாடலாம். கன்னட திரையுலகின் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக கப்ஜா மாறும் என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை என கன்னட ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நெகட்டிவ்

நெகட்டிவ்

கப்ஜா படத்தின் பாசிட்டிவ் என்றால் காஸ்டிங், மியூசிக், கேமியோ என்ட்ரிக்கள், டைம் டூரேஷன் மற்றும் ஸ்க்ரீன் பிளே என சொல்லலாம். நெகட்டிவ் என்றால் படத்தில் இடம்பெற்றுள்ள மோசமான VFX காட்சிகள் தான் படத்தை சொதப்பி விட்டன. கேஜிஎஃப் படத்தின் ஃபீல் வந்தாலும், இந்த படத்தை ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம் என இந்த ரசிகரும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X