நாங்களும் ஸ்வீட் கொடுப்போம்ல... ரஜினி, அஜித்துடன் பொங்கல் ரேஸில் இணைந்த விக்ரம், ராகவா லாரன்ஸ்!
விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
சென்னை: விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது.
பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு திகட்டும் அளவுக்கு ஸ்வீட் கொடுத்து தமிழ் சினிமா தயாராகி வருகிறது. ஏற்கனவே ரஜியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இதனால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெரிய படங்கள் வருவதால், தியேட்டர் கிடைக்காது என்பதை புரிந்துகொண்டு மற்றப் படங்கள் தானாக விலகிவிட்டன.

கடாரம் கொண்டான் டீசர்
இருந்தாலும் பொங்கல் ரேஸில் தாங்களும் ஏதோ ஒருவிதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றே முன்னணி ஹீரோக்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். அப்படி தான் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

விக்ரம் நடிப்பில...
கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

காஞ்சனா 3
இதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3ன் மோஷன் போஸ்டரும் பொங்கல் பண்டிகைக்கு தான் வெளியாகிறது. 2019ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தை ஏப்ரல், மே கோடை விடுமுறை சமயத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதிரின் சிகை
இதற்கிடையே கதிர் நடித்துள்ள சிகை திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீசாகிறது. ஆனால் இப்படம் தியேட்டர்களில் இல்லாமல், நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இது புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











