Arthana Binu: எல்லை மீறி சென்ற அப்பா.. கடைக்குட்டி சிங்கம் பட நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை: கடைக்குட்டி சிங்கம், செம உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்த்தனா பினு தனது அப்பா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தங்கள் வீட்டில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கொலை பண்ணிடுவேன் என மிரட்டுகிறார் என வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அர்த்தனா பினு. தமிழில் சமுத்திரகனியின் தொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Kadaikkutty Singam actress Arthana Binu shares a shocking video of her dads torture

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக செம படத்தில் நடித்த இவர், கார்த்தி நடித்து சூப்பர் ஹிட் அடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரது முறைப்பொண்ணாக நடித்திருப்பார்.

நடிகை அர்த்தனா பினு: கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை அர்த்தனா பினு கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சீதம்மா ஆண்டாளு ராமைய்யா சித்ரலு எனும் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் அதே ஆண்டு முதுகாவ் எனும் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

26 வயதாகும் நடிகை அர்த்தனா பினு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Kadaikkutty Singam actress Arthana Binu shares a shocking video of her dads torture

கடைக்குட்டி சிங்கம் நடிகை: 2017ல் சமுத்திரகனி, விக்ராந்த் நடித்த தொண்டன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்த ஆண்டு ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக செம படத்தில் நடித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் பிரியா பவானி சங்கரை போலவே இவரும் ஒரு முறைப்பொண்ணாக நடித்திருப்பார்.

அப்பா டார்ச்சர்: நடிகை அர்த்தனா பினுவின் அப்பாவும் மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது அப்பாவும் அம்மாவும் விவகாரத்து பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் எங்களை சொத்துக்காக அப்பா டார்ச்சர் செய்து வருகிறார் என்றும், வீட்டுக்கு சுவர் ஏறி குதித்து அவர் வந்து செய்த அட்டகாசத்தை சொல்றேன் முழுமையாக படியுங்க என ஒரு வீடியோ போஸ்ட்டை போட்டு அதிர வைத்துள்ளார் அர்த்தனா பினு.

கேட் பூட்டியிருந்த நிலையில், சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த நடிகரும் அர்த்தனா பினுவின் தந்தையுமான விஜயகுமார் வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டு இருந்த அர்த்தனா பினு மற்றும் குடும்பத்தினரை திறந்து கிடந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து கொன்னுடுவேன் என மிரட்டி உள்ளார்.

காலை 9.45 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு போன் செய்தும் இன்னமும் யாரும் வராத நிலையில், இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என அர்த்தனா பினு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சொத்துக்காக சொந்த அப்பாவே மகளையும், விவாகரத்து செய்து பிரிந்த மனைவியையும் இப்படி தொல்லை கொடுப்பது சரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Kadaikkutty Singam actress Arthana Binu shares a shocking video of her dads torture

அப்பா மீது அர்த்தனா பினு தொடுத்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தனா பினு பல படங்களில் கமிட் ஆகி நடிக்காமல் போகவும் அவரது அப்பா காரணம் என்றும் தனது நீண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு பிடித்த படங்களில் தான் நடித்து வருவதாகவும், அதில், தலையிடவும் தான் சம்பாதிக்கும் பணத்தை சொந்தம் கொண்டாடவும் அவருக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் அம்மா வழி பாட்டி வீட்டில் வசித்து வரும் என்னையும் எனது தங்கையையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்றும் தொழில் செய்யும் இடங்களிலும், தங்கை படிக்கும் கல்வி நிலையங்களுக்கும் வந்து தகராறு செய்கிறார் என அர்த்தனா பினு பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X