அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி மிரட்டுனாங்க… கார்த்தி பட நடிகை வேதனை!

சென்னை: கார்த்தி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், யுவராணி, அர்த்தனா பின்னு, விஜி சந்திரசேகர், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஜீவிதா, சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

சீரியல் நடிகையான நடிகை ஜீவிதா, 2013ம் ஆண்டு, மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாக சினிமாவில் தனது நடிப்பை பயணத்தை தொடங்கினார். அதில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வைராக்கியம் தொடரில் நடித்தார். அதற்குபின் ஆபிஸ், தேவதை, பாசமலர், மெல்லத் திறந்தது கதவு, நிலா, கண்மணி, வீட்டுப்பெண், சிவரகசியம் போன்ற பல தொடர்களில் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார்.

kadaikutty singam movie actress jeevitha talks about adjustment

நடிகை ஜீவிதா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், சினிமாவில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை மனம் திறந்து பேசி உள்ளார். அதில்,. எனக்குச் சின்ன வயசிலிருந்தே படிப்பு தவிர எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால், சென்னையில் ஏதாவது ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கத்துக்கிட்டு, எங்க ஊர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. அதுக்காக சென்னை வந்தேன். அப்போதுதான், ஷூட்டிங் பார்க்க ஏவி.எம் ஸ்டுடீயோவுக்குப் போனேன். அங்கே என்னோட நடவடிக்கையைப் பார்த்துட்டு, ஏவி.எம் புரொடக்‌ஷனில் நடிக்க கூப்பிட்டாங்க. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது.

kadaikutty singam movie actress jeevitha talks about adjustment

மிரட்டினாங்க: ஆனால், நான் சினிமாவிற்கு வந்த புதில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டாங்க, அப்புறம் மிரட்டுனாங்க. என்னுடைய இத்தனை ஆண்டு சினிமா அனுபவத்தில் ஆறு பேர் என்னிடம் நேரடியாகவே அட்ஜெட்மெண்ட்டுக்கு ஓகேவான்னு கேட்டு இருக்காங்க, போன்ல கேட்டாங்க. அவங்களிடம் இல்ல நான் இனிமேல் இப்படி கேட்காதீங்க என்று சொல்லிவிடுவேன். ஏன் என்றால், அவங்களை திட்டமுடியாது ஏன் என்றால், அவனே சம்பளத்திற்குத்தான் வேலை பார்க்கிறான். அவனை அப்படி கேட்க சொல்வதால் அவன் நம்மிடம் அப்படி கேட்கிறான். இதனால், நான் நோனு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன் என்றார்.

kadaikutty singam movie actress jeevitha talks about adjustment

தனிமை தான் சிறந்தது: இதையடுத்து கலைத்தாயின் புண்ணியத்தால், அடுத்தடுத்து தொடர்களில் பிஸியாக நடித்து வந்தேன். ஒரு நாள் லீவ் கிடைக்காதா தூங்க மாட்டோமா என்று நினைக்கும் அளவிற்கு டே அண்ட் நைட் வேலை செய்து கொண்டு இருந்தேன். ஆனால், இப்போது வாய்ப்பு குறைத்துவிட்டதால், கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்றார். இதையடுத்து, திருமண வாழ்க்கை பெஸ்டா... சிங்கிளாக இருப்பது பெஸ்டா என்ற கேள்விக்கு, தனியாக இருப்பது தான் சிறந்தது. இப்போது, நான் தனியாக இருப்பதால் பல விஷயத்தை ஆழ்ந்து யோசிக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X