'உலகம் அழியப்போகும் அந்த நாள் எப்போது வரும்'... கடைசி எச்சரிக்கை!
கடைசி எச்சரிக்கை படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை : கடைசி எச்சரிக்கை படத்தின் இரண்டாவது டீசரை ஹீலர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கடந்த வாரம் வெளியிட்டார். இப்படத்தின் இரண்டாவது டீசரை பிரபல பேச்சாளர் ஹீலர் பாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார்.

உலகம் இன்று சந்தித்து கொண்டிருக்கும் மிக ஆபத்தான சூழல் குறித்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு எதிராக மனிதன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்குகிறது என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் இரண்டாவது டீசரில் வரும் வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளன. " டேய் கோமுட்டி தலையா கடன் பிரச்சினையில செல்போனை ஆப் பண்ணி வைக்குறது எல்லாம் ஓல்ட் ஸ்டைல். செல்போன் டவரையே ஆப் பண்ணி வைக்கிறது தான் புது ஸ்டைல்", "வீட்ல சண்ட போட்டுட்டு வெளிய போய் விஷத்தக்குடிக்கிறது பழைய ஸ்டைல்... வீட்ல உட்கார்ந்து குடும்பத்தோட விஷம் குடிக்கிறது தான் புது ஸ்டைல்", போன்ற வசனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
படத்துக்கு வி சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நோபல் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக ஏ மாரியப்பன் பணியாற்றியுள்ளார். வி சீனிவாசன் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











