விவசாயத்தை பற்றி அழுத்தமாக பேசும் "கடைசி விவசாயி"!

சென்னை : விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கடைசி விவசாயி

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி என்பவர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

யோகி பாபு யானை பாகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேச உள்ளது.

 யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரங்கள்

யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரங்கள்

தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், திருநங்கை, கேங்ஸ்டர் டான் என ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய் சேதுபதி இப்பொழுது கடைசி விவசாயி என்ற படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும்

ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும்

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனர் மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி கடைசி விவசாயி படத்தின் மூலம் இணைக்கிறது.

முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி

முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி

இப்போதுள்ள காலகட்டத்தில் விவசாய நிலங்கள் மாற்றப்பட்டு வானுயர்ந்த கட்டடங்களாக உருமாறி வருகிறது. இதே நிலையே தொடர்ந்தால் விரைவில் விவசாயம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்ற கருத்தை மிக ஆழமாக இந்த படம் கூற உள்ளது. இதில் விவசாயியாக நல்லாண்டி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு வசனங்களும் பார்க்கும் அனைவரையும் யோசிக்க வைக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரமாக வந்து செல்கிறது.

விஜய் சேதுபதி புரோடக்ஷன் வெளியிடுகிறது

விஜய் சேதுபதி புரோடக்ஷன் வெளியிடுகிறது

நடிகர் யோகிபாபு இந்த படத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ட்ரிபிள் ஆர்ட்ஸ் புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி புரோடக்சன் இப்படத்தை வெளியிடுகிறது.

விவசாயத்தை பற்றி அழுத்தமாக கூறும் கடைசி விவசாயி

விவசாயத்தை பற்றி அழுத்தமாக கூறும் கடைசி விவசாயி

சென்ற வருடமே ரிலீசுக்கு தயாராக இருந்த கடைசி விவசாயி சில சூழ்நிலைகள் காரணமாக ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு இப்போது பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான கருத்தாக விவசாயத்தை பற்றி அழுத்தமாக கூறும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்க வரும் பிப்ரவரி 11ஆம் தேதி கடைசி விவசாயி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X