விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி ஒடிடியில் ரிலீசா?
சென்னை : இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இப்படத்தில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா, யோகி பாபு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

திரையரங்கு எப்போது திறக்கும்
கொரோனாவின் முதல் அலை ஓரளவு முடிந்து மாஸ்டர், சுல்தான், கர்ணன் போன்ற திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி மக்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் திடீரென கொரோனா 2வது அலை விஸ்வரூபமாகி மக்களை வாட்டி வதைத்து மறுபடியும் திரையரங்குக்கு போட்டாச்சு பூட்டு இனி திரையரங்கு எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒடிடியில்
இதனால், கோடை விடுமுறைக்கு வெளியாக தயாராக இருந்த திரைப்படங்கள் தற்போது ஒடிடி தளங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் ஒடிடியில் வெளியாக உள்ளது வேதனையாக இருக்கிறது.

ஒடிடியில் ரிலீஸ் ?
அந்த வரிசையில் ரிலீசுக்கு தயாராக இருந்த கடைசி விவசாயி திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவரின் 4வது திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க பெ ரணசிங்கம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல கடைசி விவசாயி திரைப்படத்தையும் ஒடிடியில் வெளியிட தயாரிப்பாளரும், இயக்குனருமான மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தகவல்கள் உறுதியான பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications











