பல பிரச்சினைகளுக்கு நடுவே... கடைசியில் வெற்றி பெற வேண்டும் கடைசி விவசாயி

சென்னை: காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி.

விஜய் சேதுபதி இதில் முக்கியமான ரோலில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

டிசம்பர் மாதம் கடைசி விவசாயி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் விவசாயிகளின் வலிகளை பற்றி கூற உள்ளது.

கடைசி விவசாயி

கடைசி விவசாயி

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருவதால் இவரின் திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டடித்த வருகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் சிறப்பு படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

தேசிய விருதை வென்ற காக்கா முட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி உள்ளது கடைசி விவசாயி. இப்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் எவ்வாறான வலிகளை சந்திக்கிறார்கள் எதுபோன்ற நிலைகளில் இருக்கிறார்கள் என்பதை கள ஆய்வுடன் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரும் திரும்பிப் பார்க்கக் கூடிய சிறந்த இயக்குனராக மாறியுள்ள மணிகண்டன் அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்கினார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது

விவசாயிகளின் வலிகளை

விவசாயிகளின் வலிகளை

இப்பொழுது மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு கடைசி விவசாயி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வியலையும் அதிலுள்ள வலிகளையும் மற்றும் போராட்டங்களையும் எடுத்துக்கூறும் படமாக இப்படம் உருவாகி இருக்க கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய திரைப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

விஜய் சேதுபதி புரோடக்சன்

விஜய் சேதுபதி புரோடக்சன்

இந்த நிலையில் சமீபத்தில் கடைசி விவசாய படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த படத்தை விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரோடக்சன் நிறுவனம் தயாரித்து உள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில்

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில்

நல்லாண்டி என்பவர் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் வருகிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் ரிச்சர்ட் ஹார்வே இப்படத்திற்கு இணைந்து இசை அமைத்துள்ளார். மிகச்சிறந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று பலரும் ஆச்சரியமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயம் மற்றும் விவசாயிகளைப் பற்றி பேசும் நிறைய தமிழ் படங்கள் சமீபகாலமாக வந்த வண்ணம் உள்ளது . அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக கடைசி விவசாயி கண்டிப்பாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இளையராஜா இசையமைத்த இந்தப் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு இசையமைப்பாளர் மாற்றப்பட்டு ( சந்தோஷ் நாரயணன் இசையில்) அது சம்பந்தப்பட்ட வழக்கு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாம் கடந்து கடைசி விவசாயி கடைசியாக வந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X