எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்த யாஷிகா ஆனந்த்.. ரொம்ப மெலிஞ்சுட்டாங்கப்பா.. ஷாக்காக்கும் போட்டோஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனது.
இளைஞர்களுக்கு பிடித்த இயக்குநரான எஸ்ஜே சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ என கலக்கி வருகிறார்.
இந்நிலையில் முத்தின கத்தரிக்காய் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா.

முதல் முறையாக..
இந்தப்படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த நடிக்கிறார். முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் முத்தின கத்தரிக்காய் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெள்ளிமூங்கா ரீமேக்
வெங்கட் ராகவன் இயக்கிய முத்தினக் கத்தரிக்காய் திரைப்படம், மலையாளத்தில் வெளியான வெள்ளிமூங்கா என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

ஏகப்பட்ட படங்கள்
எஸ்ஜே சூர்யா கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, உயர்ந்த மனிதன், பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மூக்குத்தி அம்மன்
இதேபோல் யாஷிகா ஆனந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மகத்துடன் இவன்தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் ராஜ பீமா படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

குடும்ப குத்து விளக்காக
இந்நிலையில் எஸ்ஜே சூர்யாவுடனான கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதன் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதில் யாஷிகா ஆனந்த், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் நெற்றியில் குங்குமம் கையில் வளையல், காதில் தோடு என குடும்ப குத்துவிளக்காக உள்ளார்.

இப்படி மெலிஞ்சு..
யாஷிகா ஆனந்தின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், எடைய குறைத்து இப்படி மெலிந்து போய் இருக்கிறாரே என கவலை அடைந்துள்ளனர். யாஷிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை பார்த்த ரசிகர்களுக்கு யாஷிகாவின் இந்த லுக் புதிதாக உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











