ஆக்‌ஷன் எடுங்கள் சிஎம் ப்ளீஸ்.. கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. நடிகை வைக்கும் கோரிக்கை

சென்னை: பாலிவுட் நடிகை காதம்பரி ஜெத்வானி சில படங்களில் நடித்திருக்கிறார். பெரிய ஹிட் எதுவும் அவருக்கு கிடைக்காவிட்டாலும் அவரது திறமையாலும் அழகாலும் வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. ஹிந்தியில் வெளியான சட்டா அட்டா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் மலையாளத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனக்கு நடந்ததாக அவர் சொல்லியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

kadambari jethwani ysrcp jagan mohan reddy

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கொள்ளாதவர்களை வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைப்பதும் தொடர்ந்துவருகிறது. கடந்த சில நாட்களாகக்கூட இந்திய திரையுலகில் ஹெட்லைன்ஸாக ஹேமா கமிஷனின் அறிக்கை இருந்துவருவது அனைவரும் அறிந்ததே.

காதம்பரி ஜெத்வானி: இந்நிலையில் பாலிவுட் நடிகை காதம்பரி ஜெத்வானியும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். அகமதாபாத்தை சொந்த ஊராக கொண்ட காதம்பரி அங்கேயே பள்ளி படிப்பை முடித்தவர். அடுத்ததாக மருத்துவம் படித்த அவருக்கு கலைத் துறையிலும் ஆர்வம் பிறந்தது. அதன் காரணமாக முறையாக பரதநாட்டியம் உள்ளிட்டவைகளை கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா கரியர்: நடிகையாக வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியது. பாலிவுட்டில் சட்டா அட்டா என்ற படத்தில் அறிமுகமான அவர் மலையாளத்தில் ஐ லவ் மீ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் செந்தட்டி காளை செவத்த காளை என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாகவில்லை. ஹிந்தி, மலையாளம், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி மொழியிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார் அவர்.

பரபரப்பை கிளப்பிய காதம்பரி: சூழல் இப்படி இருக்க காதம்பரி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரின் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியை சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்பவரும், சிலரும் ஆந்திர அரசு தலைவர்களின் உத்தரவின் அடிப்படையில் மும்பையில் உள்ள எனது வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் என்னை கடத்தி சென்று ஃபோனில்கூட பேசவிடவில்லை.

எனது அப்பாவையும், அம்மாவையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார்கள். அந்த சித்ரவதையால் எனது அப்பாவுக்கு காதுகள் கேட்கும் திறனை இழந்தன. அம்மாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. ரொம்பவே துன்புறுத்தப்பட்டேன். இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் தைரியமாக சொல்கிறேன். அவர்கள் மீது இப்போதைய முதலமைச்சர் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X