அய்யோ ஆண்டவரே, தப்பு பண்ணிட்டீங்களே: #KadaramKondan
சென்னை:
கடாரம் கொண்டான் டீஸரில் சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று உள்ளது.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை கமல் ஹாஸன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
விக்ரம்
கடாரம் கொண்டான் டீஸரை பார்த்தால் செம ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது. விக்ரம் சால்ட் அன்ட் பெப்பர் கெட்டப்பில் கெத்தாக உள்ளார். அக்ஷரா ஹாஸனுக்கு முக்கியமான கதாபாத்திரம் போன்று.

புகைப்பிடித்தல்
படத்தில் ஹீரோ தம்மடித்தாலே பிரச்சனை கிளம்புகிறது. இந்நிலையில் கடாரம் கொண்டான் டீஸரில் பெண் புகைப்பிடிக்கிறார். நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும். சரி, படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்துவிடும்.
சீயான்
விக்ரம் ரசிகர்களுக்கு கடாரம் கொண்டான் டீஸர் மிகவும் பிடித்துள்ளது. டீஸர் ஹாலிவுட் தரத்தில் மாஸாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என்கிறார்கள்.
அருமை
கடாரம் கொண்டான் டீஸரை விக்ரம் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் படம் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு வித புகார் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











