Kadaram kondan trailer: மாசான கெட்டகப்பில் விக்ரம் மிரட்டும் கடாரம் கொண்டான்.. வெளியானது டிரெய்லர்!
கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா தான் இப்படத்தை இயக்குகிறார்.

கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் டிரெய்லரை வெளியிட்டனர். முதலில் ஊடகவியலாளர்களுக்காக டிரெய்லர் திரையிடப்பட்டது. பிறகு சமூக வலதளங்களில் வெளியிடப்பட்டது.
படத்தில் டிரெய்லர் மாசாக வந்துள்ளது. விக்ரமின் கெட்டப் படுமிரட்டலாக உள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளது.
டிரெய்லர் வெளியீட்டின் போது மறைந்த நடிகர் கிரேசி மோகன் மற்றும் கமலின் சகோதரர் சந்திரஹாசன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











