twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுள் இருக்கான் குமாரு... படம் எப்படி? ஒரு பார்வை! #KIK

    By Shankar
    |

    - வெங்கட் சுபா

    டி சிவா என் நெருங்கிய நண்பர் ... அம்மா கிரியேசன்ஸ் எனது வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி மகன் போல எனக்கு நெருக்கம். ஜி வி குமார் சும்மா அறிமுகமானவர் .. கயல் ஆனந்தி அதுவும் கிடையாது .. இந்த இரண்டு பேர் தவிர இந்தப் படம் சம்மந்தப்பட்ட அனைத்து நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் ... இந்த நிலையில் இந்தப்படம் எப்படி என பலர் என்னிடம் கேட்கிறார்கள்... நானும் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் ..
    படம் உண்மையில் எப்படி ?

    உண்மையான விமர்சனம் எழுத .. நடு நிலையான விமர்சனம் எழுத ஒரு முயற்சி ...

    Kadavul Irukkan Kumaru audience view

    சும்மா சுற்றிக் கிடந்த ஜி வி பிரகாசு எதேச்சையாக கிருத்துவரான கயல் ஆனந்தியைப் பார்க்க பழக நேர, அது காதலாக முடிய காதல் கனிந்து கத்திரிக்காய் சந்தைக்கு வரும் போது வில்லனாக வருபவர் ஆனந்த்தியின் தந்தை எம் எஸ் பாஸ்கர் ... அவர் நிர்ணயித்த கல்யாணத்திற்கான விலை மிகவும் அநியாயமாக அக்கிரமமாக இருக்க, கந்தலாகிறது காதல். போதாக்குறைக்கு பெட்ரோல் ஊத்துகிறார் 'பேசுவதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசி .... காதல் பிரிந்தாலும் வேறு ஒரு நாயகி நிக்கி கல்ராணியுடன் பிரகாசு திருமணம் நிச்சயமாகிறது.

    திருமணத்திற்கு முன் நண்பர்களுடன் பார்ட்டி என சொல்லி பாண்டிச்சேரிக்கு செல்கிறார்கள் பிரகாசும் நண்பன் ஆர் ஜே பாலாஜியும்.
    பாண்டியில் இருந்து சென்னை வரும் போது லஞ்சப் புகழ் காவல் அதிகாரி பிரகாஷ் ராஜிடம் மாட்டுகிறார்கள் இருவரும்.

    இப்படி துவங்கும் இப்படத்தின் சிறப்பம்சம் பிரகாஷ் ராஜ் .. கூடுதல் சிறப்புகள் ஆர் ஜே பாலாஜி... ரோபோ சங்கர், சிங்கம் புலி, நிக்கி கல்ராணி, ஆனந்தி, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் ஜி வி பிரகாஷ்.

    சக்தி ஒளிப்பதிவும் ஜி வி இசையும் கலக்கல்.

    டாஸ்மாக் சரக்குக்கு பதில் பாண்டிச்சேரி சரக்கு... உதய நிதி, ஆர்யா, கார்த்தி இவர்களுக்கு பதில் ஜி வி ... சந்தானத்துக்கு பதில் ஆர் ஜே பாலாஜி ...பள பளா கிளு கிளு என இரண்டு நாயகிகள் கடைசியில் சிறப்புத் தோற்றத்தில் வரவேண்டிய கதாநாயகனாக ஜீவா ...என வழக்கம் போல அரைக்கப்பட்ட ராஜேஷ் மசாலா... ஆனால் புளிக்கும் முன் சூடாக புதுப் பாத்திரங்களில் தரப்படும் உணவுப் பண்டம்தான் கிக்.

    படம் பார்க்க வருபவர்களுக்கு சிறிது நகைச்சுவை உணர்வு இருந்தாலும் போதும் அதைப் பொங்க விட்டு மனம் விட்டுச் சிரித்து 1000 கவலைகள் இருந்தாலும் 2000 மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வெளியே வரலாம்.

    ஆர் ஜே பாலாஜி அட்டகாசம். சந்தானம் கதாநாயகன் ஆகிவிட்டாரே, சூரி சூப்பர் சம்பளம் கேட்கிறாரே, வடிவேலுவை டீல் பண்ணவே முடியலியே, விவேக்கை ஜி விக்கெல்லாம் நண்பனாகப் பார்க்க முடியாதே என்கிற கவலைகளுக்கு மருந்தாக விருந்தாக வந்து விட்டார் பாலாஜி.

    பிரகாஷ் ராஜ் திரையில் அதகளம் செய்கிறார்... காமெடியும் கம்பீரமும் கலந்த கலவை புதிதல்லவா... இப்படத்தின் வெற்றிக்கு ஆதாரப் புள்ளியே இவர்தான் ..
    நிக்கி ஒரு குட்டி குஷ்பூ. ஆனந்தி அனுபவக் குறைவு வெளிபட்டாலும் அம்சமான முகத்தால் ஒப்பேற்றுகிறார்.

    ரோபோவும் சிங்கம் புலியும் ராஜேந்திரனும் ஓ ஓ இல்லை ஆனாலும் அந்தந்த நிமிடம் ஓகே தான்... எம் எஸ் பாஸ்கரும் ஊர்வசியும் மனோபாலாவும் இப்படி அள்ளிக் கொட்டாவிடில் பிரகாஷ் ராஜ் வரும் வரை செயற்கை சுவாசமாகி இருக்கும் .... நடிப்பு ராட்சசர்கள்!

    இரண்டாம் பகுதியில் கதையை நகர்த்தி ரெட்டை நாயகிகளுடன் பாடல் காட்சிகளைப் புகுத்தி எப்படி எப்படியோ சுற்றி ஊர் வந்து சேர்கிறது கதை ....
    சிரிக்க வைக்கும் கலை தெரிந்த ராஜேஷ் இன்னமும் சற்று முனைந்திருந்தால் டிரிபிள் ஓகே ஒகே ஆகியிருக்கும்... இப்போ ஒகேதான்!

    ஜி வி பிரகாஷ் குமார் என்கிற இசை அமைப்பாளர் தொழில் சுத்தம், ஆனால் அந்த நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் ??/ ?? சரியான மச்சக்காரர். ஒன்றுமே செய்யாமல் (எம்எஸ் பாஸ்கருடன் மோதும் ஒரு காட்சி தவிர) கோப்பையை தனதாக்கிக் கொள்கிறார். இன்னமும் பல படங்களையும்தான்.

    டி சிவா என்கிற தயாரிப்பாளரும் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனமும் தரமான படங்களையே தருபவர்கள். இந்த முறை காலத்துக்கேற்றார் போல காசு அள்ளும் படமாக கிக் (KIK). அவரது அனுபவம் நடிகர்கள் தேர்விலும் பரபரப்பை ஏற்படுத்தும் வணிக உத்திகளிலும் தெரிகிறது. இவரால்தான் 350 திரை அர்ங்குகளில் தினசரி 1000 காட்சிகளாக உலகமெங்கும் திரைக்கு வருகிறான் குமாரு.

    கடவுள் இருக்கான் குமாரு ... 2000 மா கொட்டும் குமாரு!

    English summary
    T Siva's Kadavul Irukkan Kumaru audience review.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X