கடவுள் பாதி மிருகம் பாதி' ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர்!

By Shankar

ஒரே நாளில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லர் உருவாகிறது. படத்துக்குப் பெயர் கடவுள் பாதி மிருகம் பாதி.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பது கமல் ஹாஸன் பேசி பிரபலமான வசனம். இந்த தலைப்பை பதிவு செய்து 3 ஆண்டுகள் காத்திருந்து படமாக்கி இருக்கிறாராம் ராஜ்.

இவர் தனது செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் மூலம் உருவாக்கி வரும் படம்தான் 'கடவுள் பாதி மிருகம் பாதி'

ரோட் த்ரில்லர்

ரோட் த்ரில்லர்

படம் பற்றி பேச ஆரம்பித்த இயக்குநர் ராஜ், ''இது ஒரு ரோடு த்ரில்லர் " என்று தொடங்கினார்.

அப்படியானால் ராம் கோபால் வர்மாவின் 'ரோடு' லிங்குசாமியின் 'பையா', வெற்றிமாறனின் 'உதயம் என்எச்4' போலவா..?

ஒரே நாளில்...

ஒரே நாளில்...

"இது ரோட் சைடு த்ரில்லர் தான். ஆனால் நீங்கள் சொன்ன படங்கள் போலிருக்காது. வேறு வகையான கதை. இந்தக் கதை நடப்பது சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில். முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிகிறது. இது ஒரே நாளில் நடக்கும் கதை," என்றார் இயக்குநர்.

மைனா சேது

மைனா சேது

'மைனா' சேது இந்தப் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். குத்துப் பாடல் காட்சியில் மும்பையின் சூப்பர் மாடல் சுரபி பிரபு ஆடியுள்ளார்.

ஒளிப்பதிவு கிஷோர் மணி. இவர் இதற்குமுன் மலையாளத்தில் மணியாற்றிய அனுபவம் பெற்றவர். இசை ராகுல்ராஜ். இவர் தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்த 'ஒ மை ப்ரண்ட் ' மற்றும் மலையாளத்தில் ப்ருத்விராஜ் நடித்த 'லண்டன் பிரிட்ஜ்.' 'பேச்சுலர் பார்ட்டி' வெற்றிப் படங்களுக்கு இசையைத் தந்தவர்.

இணை இயக்குநருக்கு மரியாதை

இணை இயக்குநருக்கு மரியாதை

நடித்து தயாரித்து இயக்கியுள்ள ராஜ் தன் இணை இயக்குநர் சுரேஷின் பெயரையும் தன் பெயருடன் இணைத்து கதை திரைக்கதை இயக்கம் ராஜ் & என்று இணையாகப் போட்டுக் கௌரவித்துள்ளார். மதுரைக்காரரான சுரேஷ்- இயக்குநர்கள் ஹரி, சுந்தர்.சி ஆகியோரிடம் சினிமா கற்றவர். .

கோடை விடுமுறையில் வெளியிடும் திட்டத்தில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X