விவசாயிகளின் வாழ்க்கை முறையையும் போராட்டத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் கடைசி விவசாயி!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் கடைசி விவசாயி

காக்காமுட்டை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்

மாயாண்டி இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விவசாயிகளின் வாழ்க்கை முறையையும் போராட்டத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது கடைசி விவசாயி.

விஜய் சேதுபதியின் தயாரிப்பில்

விஜய் சேதுபதியின் தயாரிப்பில்

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தயாரிக்கும் படங்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக புது இயக்குனர்களின் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வரும் விஜய் சேதுபதி இப்பொழுது தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தை வெளியிடுகிறார்.

 ஃபேவரைட் இயக்குனராக

ஃபேவரைட் இயக்குனராக

காக்கா முட்டை என்ற அட்டகாசமான படத்தை இயக்கிய மணிகண்டன் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தையும் இயக்கினார். காக்கா முட்டை படம் தேசிய விருதை வென்றது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக மாறிய மணிகண்டன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கதைகளாக தொடர்ந்து இயக்கி வருகிறார். அதேப்போலத்தான் ஆண்டவன் கட்டளை படமும் மிக எளிமையான கதை களத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். யோகி பாபு முக்கிய வேடத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்

மாயாண்டி முதன்மை கதாபாத்திரத்தில்

மாயாண்டி முதன்மை கதாபாத்திரத்தில்

ஆண்டவன் கட்டளையே தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் மணிகண்டன் இணைந்துள்ள திரைப்படம் கடைசி விவசாயி. முழுக்க முழுக்க விவசாயிகளைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் பேசியுள்ள இந்த படத்தில் மாயாண்டி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் ரஜினியை மனதில் வைத்துதான் எழுதப்பட்டதாக மணிகண்டன் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார்

விவசாயிகளின் போராட்டத்தை

விவசாயிகளின் போராட்டத்தை

யதார்த்தமான கதை தளத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகிறது. ட்ரிபிள் ஆர்ட்ஸ் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய்சேதுபதி வெளியிடுகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை முறையையும் போராட்டத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் படம் என்பதால் அரசியல் சம்பந்தப்பட்ட பல வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. விவசாயியாக நடிகர் நல்லாண்டி இதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X