ரேஷன் கார்டு கூட இல்லாம இருக்கியே.. உன்ன எப்படி இந்த நாட்டோட குடிமகன்னு நம்புறது... கடைசி விவசாயி !

சென்னை: காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி

நல்லாண்டி என்பவர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி இதில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்

வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தில் இருந்து அரசியல் பேசும் அட்டகாசமான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது

தேசிய விருதை வென்ற இயக்குனர் மணிகண்டன்

தேசிய விருதை வென்ற இயக்குனர் மணிகண்டன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனது. அந்த வகையில் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருதை வென்ற இயக்குனர் மணிகண்டன் அடுத்ததாக விஜய்சேதுபதியுடன் கைகோர்த்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்கினார். மிகவும் எளிமையான கதைகளை தொடர்ந்து இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் காக்கா முட்டை மணிகண்டன் அடுத்ததாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நல்லாண்டி முதன்மை கதாபாத்திரத்தில்

நல்லாண்டி முதன்மை கதாபாத்திரத்தில்

விவசாயிகளின் வலியையும் தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறது . என்பதையும் மிகத் தெளிவாக இந்த படம் கூற உள்ளது கடைசி விவசாயி. இப்படம் ஒரு விவசாயியின் வலியைப் பற்றிக் கூறும் என்பதால் இப்படத்தில் 85 வயது மதிக்கத்தக்க நல்லாண்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . மிகவும் எதார்த்தமான நடிப்பை நல்லாண்டி இந்த படத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் வெளியிடுகிறது

விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் வெளியிடுகிறது

மேலும் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்டு இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

ஓடிடியில் வெளியாகவில்லை

ஓடிடியில் வெளியாகவில்லை

சென்ற வருடமே ரிலீசுக்கு தயாராக இருந்த கடைசி விவசாயி கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எனவே நேரடியாக ஓடிடி வெளியாகியது என்ற தகவலும் வெளியானது. ஆனால் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகி உள்ளது

அரசியல் பேசும் காட்சிகள்

அரசியல் பேசும் காட்சிகள்

அதன்படி பிப்ரவரி 11ஆம் தேதி கடைசி விவசாயி திரையில் வெற்றிகரமாக வெளியாகிறது. விவசாயத்தை பற்றியும் விவசாயிகளின் வலிகளை பற்றியும் பேசும் கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், காவல் நிலையத்திற்கு மனு கொடுக்கச் செல்லும் பிச்சாண்டியிடம் ரேஷன் கார்டு கூட இல்லாம இருக்கியே.. உன்ன எப்படி இந்த நாட்டோட குடிமகன்னு நம்புறது என அரசியல் பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X