twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலை காமெடியா சொல்லுங்க கண்டிப்பாக ஜெயிக்கும் - பேரரசு #KadhalAmbu

    |

    சென்னை: எந்த காதலையும் நகைச்சுவையாக சொன்னால் அது விரைவாக ரசிகர்களிடம் சென்றடையும், படமும் நிச்சயம் 100 சதிவிகிதம் வெற்றியடையும் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். காதல் அம்பு படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு சினிமாவில் சொல்வது மக்களை எளிதில் சென்றடையும் என்று கூறினார்.

    விழாவில் பேசிய நடிகர் ஆரி, அரசியல்வாதிகளைப் போல சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்திற்கு பேனர் வைக்கக் கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    எம்.டி.பி.சி அண்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் எம்.டி.சுரேஷ் பாபு தயாரிக்கும் படம் காதல் அம்பு. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு நாயகனாக நடித்திருத்திருக்கிறார். மேலும் பரத், கிரண், ரேஷ்மா, மனீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜூனியர் பாலையா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

    என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது?என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது?

    மது குடிக்க வேண்டாம்

    மது குடிக்க வேண்டாம்

    இவ்விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இயக்குநர் பேரரசு, விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். நடிகர் ஆரியின் சமூக சேவையைப் பாராட்டுகிறேன். மேலும், மதுபானம் குடிப்பது போல படம் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று படக்குழுவினரை வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

    நிஜ சம்பவங்கள்

    நிஜ சம்பவங்கள்

    கதாநாயகன் ஸ்ரீனிவாச நாயுடு பேசும்போது, நானும் பிரவீனும் ஒரே கம்பெனியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தோம். அப்போது உங்களை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரவீனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாத்தனம் கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு முன்பு இதென்ன இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துக் கொண்டிருப்பேன், ஆனால் இப்படத்தில் நடித்தபோது தான் ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்து கொண்டேன் என்றார்.

    பேரரசு பேச்சு

    பேரரசு பேச்சு

    இயக்குநர் பேரரசு பேசும்போது, ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன். தமிழில் இதுதான் முதல் படம். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிறமொழிகளில் வெற்றி பெற்றால் வெறும் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும் என்றார்.

    காமெடி காதல்கள்

    காமெடி காதல்கள்

    இயக்குநர் பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. இன்று போய் நாளை வா, காதலிக்க நேரமில்லை என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.

    மது கலாச்சாரம் வேண்டாம்

    மது கலாச்சாரம் வேண்டாம்

    இப்போது எந்த காரணமாக இருந்தாலும் மது அருந்துவது தான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. ஆகையால், இதுபோன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம் என்றார் பேரரசு. விழாவின் இறுதியில் காதல் அம்பு படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

    Read more about: perarasu
    English summary
    Actor Perasu speak Audio Launch of KadhalAmbu. In that event, he has put out a humble request to all director dont use the scene tasmac. love is comedy will success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X