வாவ்.. அடுத்த ஹீரோயின் இவங்க தானா.. நடிகர் அப்பாஸ் மகளின் க்யூட் போட்டோ!

சென்னை: நடிகர் அப்பாஸ் அவரின் மனைவி, மகள், மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவில் அப்பாஸின் மகள் எமிரா, தனது தந்தையைப் போலவே செம க்யூடாக அழாக அம்சமாக இருக்கிறாள். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் இவங்க தானா என கேட்டு வருகின்றனர்.

Kadhal Desam Actor Abbas family photo Trending on social media

90ஸ் கிட்ஸ்களின் சாக்லேட் பாயாகவும், பெண்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை குவிக்க தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர். ஒரு காலகட்டத்தில் கால் சீட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் நான்கு ஐந்து படங்களில் நடித்தார்.

நடிகர் அப்பாஸ்: விஐபி, பூச்சூடச்வா, இனி எல்லாம் சுகமே, சுயவரம், மலபார் போலீஸ், திருட்டுப்பயலே உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த மின்னலே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ராஜேஷ் என்கிற கேரக்டரில் அப்பாஸ் நடித்திருந்தார்.

Kadhal Desam Actor Abbas family photo Trending on social media

படவாய்ப்பு குறைந்தது: இந்த படத்தையும், இந்த படத்தின் பாடலையும் இன்றைய இளம் தலைமுறையினரும் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மார்க்கெட் சரிந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த அப்பாஸ் . திடீரென ஹார்பிக் விளம்பரத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

டாக்சி டிரைவர்: ஒரு கட்டத்தில் சுத்தமாக படவாய்ப்பே இல்லாததால், வெளிநாட்டிற்கு சென்று செட்டிலான அப்பாஸ். அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்ட போது, பைக் மெகானிக்காக வேலை செய்ததாகவும், கழிவறை சுத்தம் செய்ததாகவும், நேரம் கிடைக்கும் போது, டாக்சி டிரைவராகவும் பணியாற்றினேன் என்று அண்மையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

Kadhal Desam Actor Abbas family photo Trending on social media

வாவ் என்ன அழகு: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அப்பாஸ் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது குடும்ப போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அப்பாஸின் மகள் செம க்யூட்டாக, வசீகரமான அழகுடன் இருக்கிறாள். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், கதாநாயகியாக அத்தனை தகுதியும் இவருக்கு இருக்கு.. அடுத்த ஹீரோயின் இவங்க தானா என கேட்டு வருகின்றனர்.

நடிகர் அப்பாஸ் கடந்த 1997 ஆம் ஆண்டு எரும்அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்து பெரியவர்களாக உள்ளனர். இந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X