பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணமா? காதல் என்பது பொதுவுடமை வில்லங்கமான கதை.. பயில்வான் விமர்சனம்!

சென்னை: ரோகினி, வினீத்,லிஜோமோல் ஜோஸ், அனுஷா உள்ளிட்டோர் நடித்த காதல் என்பது பொதுவுடைமை படம் காதல் தினம் அன்று தியேட்டரில் வெளியானது. தன் பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை குடும்பத்தில் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த அளவிற்கு போராடுகின்றனர் என்பது தான் காதல் என்பது பொதுவுடமை படத்தின் கதை. இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

அதில், காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் ஒரு புரட்சிகரமான ஒரு புதுமையான திரைப்படம். ஆனால் இந்த படம் தமிழரின் பண்பாட்டுக்கு விரோதமான திரைப்படம். கணவன் மனைவியான வினித் மற்றும் ரோகிணியும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். லிஜோமோல் ஜோஸ் துருதுருப் பெண்ணாக நடித்து இருக்கிறார். லிஜோமோல் ஜோஸ் ஒரு நாள் தன் அம்மாவிடம் காதலிப்பதாக சொல்ல, ரோகிணியும் காதலரை அழைத்து வரும்படி சொல்கிறாள். மகளின் திருமண விஷயம் பேசும் இந்த நேரத்தில் அவரின் அப்பாவும் இருக்க வேண்டும் என நினைக்கும் ரோகினி அவரையும் வீட்டுக்கு வரவைக்கிறாள்.

kadhal enbadhu podhu udamai bayilvan ranganathan Review

காதல் என்பது பொதுவுடமை: அந்த நேரம் லிஜோமோல் ஜோஸின் நண்பரான ரவீந்திரா உடன்வர, மகள் இவரைத்தான் காதலிக்கிறாள் என நினைத்து கொண்டு இருவரும் அவரிடம் திருமணம் குறித்து பேசுகின்றனர். அப்போது தான் லிஜோமோல் ஜோஸ், நான் இவரை காதலிக்கவில்லை, நந்தினியை என்ற தன் தோழியை காதலிப்பதாக சொல்ல, இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால், ரோகிணி பிரச்சனை செய்ய நந்தினியும் லிஜோமோல் ஜோஸ் பிரிந்து விடுகின்றனர். அதன் பிறகு இருவரும் எப்படி சேர்ந்தார்கள்.. இருவருக்கும் இடையே என்ன மாதிரியான பிரச்சனை நடந்தது என்பது தான் காதல் என்பது பொதுவுடமை படத்தின் கதை.

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணமா?: பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் ஒரு தவறான பாதையை காட்டி உள்ளது இந்த படத்தை நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க முடியாது. இயல்புக்கு மாறான விஷயத்தை இயக்குநர் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஒரு வேலை இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், நீங்கள் தாராளமாக படத்தை பார்க்கலாம். காதல் என்பது பொதுவுடமை படம் புதிய கதையாக இருந்தாலும் வில்லங்கனமான கதையாக இருக்கிறது. இந்த படத்திற்கு நான் 100க்கு 25 மதிப்பெண் தான் தருவேன் என்று பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த படத்தில, சாம் என்கிற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். அதே போல, லிஜோமோல் ஜோஸின் அம்மாவாக லக்ஷ்மி என்கிற கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் ரோகிணி. தேவராஜாக பொருத்தமாக இருக்கிறார் வினீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X