twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 ஆண்டுகளைக் கடந்த காதல்… அதே பசுமையான நினைவுகளுடன்...!

    |

    சென்னை : காதல் திரைப்படம் வெளிவந்து இன்றோடு பதினைத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் அப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் நம் மனத்தில் பசுமையாக உள்ளது.

    காதல் அழகானது, காதல் பூ போன்றது, காதலுக்கு கண் இல்லை என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால், காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்பதை உறக்க சொல்லியப்படம் தான் காதல்.

    Kadhal Fantastic movie

    பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது.

    டீன் ஏஜ் பருவத்தில் வரும் காதல் பெரும்பாலும் இனக்கவர்ச்சியால் தான் வரும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் கதாநாயகி சந்தியாவுக்கு, அழுக்கா இருக்குற பரத் பார்த்ததும் காதல் வருகிறது. இதை மிகவும் ஆழகாக சொல்லி கதையை நகர்த்தி இருப்பார்.

    Kadhal Fantastic movie

    காதலிப்பதும், காதலிக்கப்படுவது அழகு, அந்த அழகிய காதலை சிந்தாமல் சிதறாமல் நமக்கு அள்ளித்தந்தவர் பாலாஜி சக்திவேல். அதில் சாதி, பணக்காரன், ஏழை என்ற பாகுபாடை மிகவும் நேர்த்தியாக சொல்லி புகழின் உச்சிக்கு சென்றார் அவர்.

    பரத் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் இருவரின் நடிப்பும் மிகவும் பேசப்பட்டது. இதுவும் கிளைமாக்ஸில் பரத்தின் நடிப்பு, கதாபாத்திரத்துடன் ஒன்றி, காதல் தோல்வியின் வலியை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவைத்திருப்பார். இன்றளவும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த படம் அமைந்தது என்று சொல்லலாம்.

    Kadhal Fantastic movie

    நடிகை சந்தியாவிற்கும் இதுவே முதல் திரைப்படம். இப்படம் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு காதல் பரத், காதல் சந்தியா, காதல் தண்டபாணி மற்றும் காதல் சுகுமார் என்று எல்லோரும் அழைக்கப்பட்டனர். அவ்வளவு பெயர் வாங்கித் தந்தது அந்த படம்.

    வழக்கம் போல பணக்கார பெண், ஏழை காதலன் என்ற ஒன்றை மையக்கருவதாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் போல இல்லாமல் இதில், அவர்களின் திருமணம், அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகள் தான் ஹைலைட். 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்றும் இந்த படம் நெஞ்சில் நிற்கிறது என்றால் அதற்கு அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் காரணம்.

    Kadhal Fantastic movie

    காதலிப்பவர்களையும், காதலை மறந்தவர்களையும் ஒரு முறை, கண்ணீர் விட்டு அழவைத்தது இந்த காதல் படம் என்பது மறுக்க முடியாத உண்மை. காதலர்களுக்குத் தான் அழிவு உண்டு காதல் என்றும் அழியாது என்தை உணர்த்தும் விதமாக இந்த படம் அமைந்து இருந்தது.

    இப்படத்தியஇயக்கிய பாலாஜி சக்தி வேல் இதுபோன்று மேலும் பலப்படத்தை இயக்க வேண்டும் என்பது காதல் பட ரசிகர்களின் கோரிக்கை.

    English summary
    fantastic movie Kadhal turns 15 years today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X