அய்யோ பாவம்.. கஷ்டத்தில் இருக்கும் காதல் கொண்டேன் நடிகர்.. செல்வராகவனிடம் சான்ஸ் கேட்டு கெஞ்சுறாரு!

சென்னை: காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலின் காதலராக ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுதீப் சாரங்கி பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் செல்வராகவனிடம் கடைசியா ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க என கெஞ்சிக் கேட்கும் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காதல் கொண்டேன் படத்தில் நடிகர் சுதீப் சாரங்கி தனுஷை விட அழகாகவும் அசத்தலாகவும் நடித்திருப்பார். ஆனால், தனுஷ் இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தவரின் நிலைமை இப்படி மோசமாக உள்ளதை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Kadhal Konden actor Sudeep Sarangi asks acting chance to Selvaraghavan

பல நடிகர்கள் எந்தவொரு பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து சில ஆண்டுகளில் காணாமல் போனது போல இவரது நிலைமையும் ஆகிவிட்டது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒன் டைம் ஒண்டர்: ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ஒரு சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அப்படியே நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். காதல் மன்னன் ஹீரோயின் மானு, ஜேஜே பட நாயகி பிரியங்கா கோதாரி, நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்ட அந்த லைட் மேன் என ஒரு படத்தில் வந்தாலும், ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்கள் மனங்களை சிலர் கவர்ந்து விடுவார்கள். அப்படி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் காதல் கொண்டேன் படத்தில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் சாரங்கியும். "பதினெட்டு வயதில் பார்ப்பவர் எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு", என அவர் போட்ட ஆட்டமும், அந்த "காதல் காதல் காதலின் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா" பாடலிலும் அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.

காதல் கொண்டேன் ஆதி: செல்வராகவன் இயக்குநராக அறிமுகமாகி முதல் முறையாக தனது தம்பியை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் மெயின் ஹீரோவே ஆதி கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் தான். அந்த படத்தில் வில்லன் தான் தனுஷ். கடைசி கிளைமேக்ஸில் தனது காதலி காதலித்த பையனோடு சேர்த்து வைக்க தனது உயிரையே மாய்த்துக் கொள்வார்.

குணா எஃபெக்ட்: செல்வராகவன் இந்த படத்தையே குணா படத்தின் எஃபெட்டில் தான் உருவாக்கியிருப்பார். ஹீரோயினை தனியாக குகை போன்ற ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்வதும் அதன் பின்னர் இவரது அன்பை புரிந்துக் கொண்டு சோனியா அகர்வால் தனுஷை பாசமுடன் பார்ப்பது எல்லாம் அந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனது தான்.

ஒரு சான்ஸ் கொடுங்க: காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு என்னமோ பிடிச்சிருக்கு படத்தில் நடித்த சுதீப்புக்கு தமிழில் வெற்றி படங்கள் அமையவில்லை. அதன் பின்னர், இந்தி மற்றும் பெங்காலி மொழிப் படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்கலில் நடித்து வந்த அவர் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் கஷ்டத்தில் தவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தது போல இப்பவும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நல்லா நடிப்பேன் செல்வா சார் ஒரு சான்ஸ் கொடுங்க என அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேட்பதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X