5 மணிக்கு ஷூட்டிங்னா 4 மணிக்கே அங்கிருப்பார்.. அர்ப்பணிப்புள்ள ஹீரோ.. அஜித்தை புகழும் இயக்குனர்!

By

சென்னை: நடிகர் அஜித்குமாரை, பிரபல இயக்குனர் அகத்தியன் புகழ்ந்துள்ளார்.

Recommended Video

அஜித் Bangalowல் என்ன இருக்கு? | வெளியான உண்மைகள் | Ajith Kumar

அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த படம், காதல் கோட்டை. சூப்பர் ஹிட் படமான இதை அகத்தியன் இயக்கி இருந்தார்.

இதில், தேவயானி, கரண், ஹீரா, மணிவண்ணன், பாண்டு, ராஜீவ், ராஜா, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்திருந்தனர்.

கவலைப்படாதே சகோதரா

கவலைப்படாதே சகோதரா

பார்த்துப் பழகிய காதல் கதைகளுக்கு மத்தியில் பார்க்காமல் வளர்ந்த ஒரு காதலைச் சொன்ன, படம் இது. தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்திருந்தார். தேவா இசை அமைத்திருந்தார். அவர் இசையில், வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, கவலைப்படாதே சகோதரா, நலம் நலமறிய ஆவல் உட்பட அனைத்து பாடல்களும் அசத்தல் ஹிட். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்களை முணு முணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.

தேசிய விருது

தேசிய விருது

சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்த இந்தப் படம் சிறந்த இயக்கம், திரைக்கதை, சிறந்த தமிழ்ப் படம் ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்றது. சென்னையில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் தனது சர்டிபிகேட்டை தொலைக்கிறாள் ஹீரோயின். சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஹீரோ கையில் கிடைக்கிறது, அது. அதில் இருக்கும் ஊட்டி முகவரியை பார்த்து அனுப்பி வைக்கிறான், ஹீரோ.

இயக்குனர் அகத்தியன்

இயக்குனர் அகத்தியன்

நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்புகிறாள் நாயகி. தொடர்ந்து கடிதத்தின் மூலம் காதல் தொடர, அவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் கதை. இந்தப் படம் வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன் 24 வருடத்தைக் கடந்தது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் அகத்தியன், நடிகர் அஜித் பற்றி கூறியிருப்பதாவது:

அர்ப்பணிப்புள்ள நடிகர்

அர்ப்பணிப்புள்ள நடிகர்

'அஜித், சாதாரண மனிதர் போலதான் நடந்துகொள்வார். தான் ஒரு பெரிய ஹீரோ என்பது போல எப்போதும் நடந்துகொண்டதில்லை. காலையில் 5 மணிக்கு ஷூட்டிங் என்றால் நான் நான்கரை மணிக்கு அங்கு செல்வேன். அஜித் அங்கு 4 மணிக்கே வந்திருப்பார். அவர் அர்ப்பணிப்புள்ள நடிகர். அவர் இயல்பாக நடிப்பவர். 'ஒன் மோர்' கேட்பதற்கான வாய்ப்பை கொடுக்கவே மாட்டார்.

அனைத்து கேரக்டருக்கும்

அனைத்து கேரக்டருக்கும்

'காதல் கோட்டை' படம் ரிலீஸ் ஆன பிறகு என்னை அழைத்து கேட்டார், கிளைமாக்ஸில் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்று. ஆனால் அவர் மிகவும் சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்திருந்தார். அனைத்து விதமான கேரக்டருக்கும் பொருந்த கூடிய அருமையான நடிகர் அவர். இவ்வாறு இயக்குனர் அகத்தியன் கூறியுள்ளார். நடிகர் அஜித் இப்போது, ஹெச். வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X