Breaking: காதல் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்... ஆட்டோவில் அனாதையாக உயிரிழந்து கிடந்த பரிதாபம்!

மதுரை: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல்.

பரத், சந்தியா, காதல் சுகுமார் ஆகியோருடன் பாபு என்பவரும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

விருச்சககாந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்த பாபு, பட வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில், அவர் கேட்பார் யாருமின்றி அனாதையாக உயிரிழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது.

 Kadhal movie actor Babu is reported to have died suddenly

காதல் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்: 2004ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பரத், சந்தியா, சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். மதுரை அருகே நடந்த உண்மையான சம்பவத்தை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் விருச்சககாந்த் என்ற சின்ன கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார் பாபு. ஒல்லியான உடல்வாகுடன் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் எனக் கூறி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் பாபு. இந்த ஒரே காமெடியால் பிரபலமான பாபுவுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடைசியாக விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலும் சிறிய காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வருமானத்துக்கு வழியில்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு அபி சரவணன் போன்ற சில திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வந்தனர். இதனிடையே பாபுவின் அம்மா, அப்பா இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பாபு, யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், மதுரையில் தனியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பாபு ஆட்டோவில் உயிரிழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. கண்களை திறந்த நிலையில் நடிகர் பாபு உயிரிழந்து கிடந்த போட்டோ வைரலாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலகினர் பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X