தொடரும் சோகம்.. காதல் பட நடிகர் திடீர் மரணம்.. ஆட்டோவில் இருந்து சடலமாக மீட்பு!
சென்னை: காதல் பட நடிகரின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல்'. இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வசூலையும் குவித்தது.

விருச்சிககாந்த்
இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் வருங்கால இயக்குநரிடம், சான்ஸ் கேட்க போவதாக அவரின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
தான் ஹீரோவாகதான் ஆக வேண்டும் என்று வசனம் பேசுவார். அவரது கதாப்பாத்திரம் அதிகம் ரசிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு பாபுவுக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சாலைகளில் சதிரிந்தார்..
இதனால் வறுமை நிலைக்கு ஆளான பாபு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்தனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான பாபு சாலைகளில் சுற்றித் திரிந்தார்.

ஊரடங்குக்கு பிறகு
பாபு சரியான உடை, உணவு இன்றி சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக தெரிகிறது.

சடலமாக மீட்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து தூங்கியுள்ளார் பாபு. காலையில் ஆட்டோ உரிமையாளர் ஆட்டோவை பார்த்தபோது பாபு சடலமாக கிடந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சி
ஆட்டோவில் படுத்து தூங்கிய நடிகர் பாபு வறுமை காரணமாக திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணமடைந்தார்.

மரணங்கள்
நேற்று சீரயல் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவர்களை தொடர்ந்து காதல் பட நடிகர் பாபுவும் திடீரென மரணமடைந்துள்ளார். திரைத்துறையில் தொடரும் மரணங்கள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











