படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்!
காதல் பட புகழ் நடிகர் பல்லு பாலு சாலையோரங்களில் படுத்து கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் காதல் விருச்சிககாந்த் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பது தெரிய வந்துள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த படம் காதல். இந்த படத்தில் விருச்சிககாந்த் எனும் வேடத்தில் நடித்திருப்பார் பல்லு பாலு. ஒரேகாட்சி தான் என்றாலும் அவரது கதாபாத்திரம் இன்றளவும் அனைவரது நினைவிலும் இருக்கக் கூடியதாக இருக்கும்.

"அமெரிக்க மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் ஸ்ரெயிட்டா ஹீரோ தான். அப்புறம் அரசியல், பிறகு சிஎம், டெல்லி.. அது போதும்"என அவர் பேசிய வசனத்தை வைத்து பல மீம்ஸ்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் காதல் படத்திற்கு பிறகு பல்லு பாலுவிற்கு தான் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் அவர் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தார். பெற்றோரும் இறந்து போனதால், அனாதையாக அலைந்து திரிந்திருக்கிறார்.
மன இறுக்கத்தால் தவித்துக்கொண்டிருந்த காதல் விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர் - வீடியோ
இதுகுறித்து அப்போது செய்தி வெளியானதை தொடர்ந்து, பல்லு பாலுவுக்கு தோள் கொடுத்து உதவினார் வில்லன் நடிகர் சாய் தீனா. இதனால் அவரால் சிறிது காலம் தள்ள முடிந்தது. ஆனால் மதுப்பழக்கத்தை கைவிட இயலாமல், இப்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை வடபழனி அருகே சாலையோரத்தில் பல்லு பாலு படுத்து தூங்கியதை சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கோவில் வாசல்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவர். லேசாக மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
முன்பு மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்காக பல்லு பாலுவை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார் சாய் தீனா. ஆனால் அங்கிருந்து தப்பிச் சென்ற பாலு, தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறாராம். மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டால் மட்டுமே பல்லு பாலுவுக்கு நல்லது நடக்கும் என்கின்றனர் அவரது நண்பர்கள்.


Click it and Unblock the Notifications











