Kadhal Oothikichu: காதல் ஊத்திக்கிச்சு.. காதலர்களை வைப் செய்ய வைத்த ஆல்பம் பாடல்!
சென்னை: ஒரு படத்திற்கு இசையமைப்பது என்பது சாதாரணமான விஷயம், அப்படியே இசையமைக்க வாய்ப்பு கிடைத்தாலும், அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தால் தான், அந்த இசையமைப்பாளருக்கு அடுத்த வாய்ப்பு வரும். ஆனால், இந்த காலகட்டத்தில் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிய இசையமைப்பாளர்கள் கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், கீர்த்தன் இசையமைத்து தயாரித்த "காதல் ஊத்திக்கிச்சு" என்ற ஆல்பம் பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத் போன்றவர்கள் பலர் சுயாதீன ஆல்பங்களை உருவாக்கியுள்ளனர். அனிருத்தின் ஆல்பம் பாடலான எனக்கென யாரும் இல்லையே, சென்னை சான்ஸே இல்லஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல பால் டப்பா காத்து மேல காத்து கீழ பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி இளசுகளை ஆட்டம்போட வைத்தது.

டிரெண்டாகும் ஆல்பம் பாடல்கள்: அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான நடிகர் அசல் கோலார் எழுதி, நடித்த ஆல்பம் பாடலான யார்டா அந்த பையன் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை 2கே கிட்ஸ் எனப்படும் இந்த கால இளம் தலைமுறையினர் அதிக அளவில் பார்த்து ரசித்தனர், அசல் கோலார், சாய் அபயங்கர், பால் டப்பா என பல இளம் இசையமைப்பாளர் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
காதல் ஊத்திக்கிச்சு: இந்நிலையில், கீர்த்தன் இசையமைத்து தயாரித்த "காதல் ஊத்திக்கிச்சு" என்ற ஆல்பம் பாடல் swan Studios வெளியிட்டுள்ளது இந்த பாடலை M. M. மானசி பட, சந்தோஷ் பாடலை எழுதி உள்ளார். மேலும் மேகனா மல்லிகார்ஜுன் இயக்கி உள்ள இந்த ஆல்பம் பாடல் இணையத்தில் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த காலத்து இளசுகளை காதல் என்ன பாடுபடுத்துகிறது என்பதை அந்த ஆல்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











