விசித்ரா கதை போல.. வெளியில் சொல்லமுடியாத பல கதை இருக்கு ... காதல் சரண்யா பேட்டி!
சென்னை: நடிகை விசித்ரா கதை போல, வெளியில் சொல்லமுடியாத பல கதை இருக்கு என்று காதல் சரண்யா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா, தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் ஒருவர், தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதோடு படப்பிடிப்பில் சண்டை இயக்குநர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சமூகவலைத்தளத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
காதல் சரண்யா: இந்த நிலையில், காதல்,பேராண்மை படங்களில் நடிகை காதல் சரண்யா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், ஒரு நடிகை இதுபோன்ற பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதை உடனே சொல்ல வேண்டும் என்பார்கள், பிரச்சனை நடந்து இவ்வளவு நாள் கழித்து அதை ஏன் சொல்றீங்க என்று கேட்பார்கள்.
ஆண்கள் ஆதிக்கம்: ஒரு நடிகை சின்ன நடிகையாக இருக்கும் போது இது பற்றி வெளியே சொன்னால், அது யார் காதிலும் விழாது. ஆனால், பெயர், புகழ், அதிகாரம் என எல்லாம் இருந்தால் தான் நமக்கு நடந்த அநியாயத்தை வெளியே சொல்ல முடியும். அது மட்டுமில்லாமல் சினிமாவில் ஆண்கள் அதிக்கம் தான் அதிகமாக உள்ளது. அதுவும் அவர்கள் பெரிய நடிகர் பற்றி புகார் கூறியதால், அப்போது அது எடுபடாமல் பொய்விடும். இதனால் தான், விசித்ரா 22 வருஷம் கழித்து இது பற்றி பேசி இருக்கிறார். அவர் இப்போ சொன்னது தப்பே கிடையாது.
மோசமான அனுபவம்: எனக்கும் விசித்ரா சொன்னது போல நடந்து இருக்கு. நானும் கூட அனுபவித்திருக்கிறேன். நானும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பு வாய்ப்புக்காக காத்திருக்கும் போது பல மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கேன். அப்போ நான் இதை எல்லாம் பேசினால் யாரும் காது கொடுத்து கூட கேட்க ஆள் இல்லை.
பல கதைகள்: நீங்க தானே இந்த துறையை தேர்ந்தெடுத்தீங்க. மீடியானாலே இப்படித்தானே இருக்கும் என்று சிலர் இளக்காரமா பேசுவார். இந்த பிரச்சனை சினிமா துறையில் மட்டுமல்ல பல துறைகளில் விசித்ரா கதை போல வெளியில் சொல்லமுடியாத பல கதை இருக்கு என்று காதல் சரண்யா பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











