கேட்க நல்லா இருக்கே.. இளைஞர்களை கவரும் ‘காதல் சத்தம்’ புதிய ஆல்பத்துக்கு குவியும் வரவேற்பு!
சென்னை: டிஜிட்டல் யுகத்தின் காதலின் மென்மையான உணர்வுகளைப் பேசும் 'காதல் சத்தம்' (Kadhal Satham) பாடல் தற்போது வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இது இசையையும் உணர்வையும் சங்கமிக்கச் செய்யும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.
"Let The Sound Of Love Take Over" என்ற வாசகத்துடன் உருவான இந்தப் பாடல், காதலின் மென்மையான துடிப்பையும், உள்மன உணர்ச்சிகளையும் இசையின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறது.

கஜாந்த் கே (Kajanth K) அவர்களின் இசை மற்றும் தாளம், பாடலின் ஆழமான உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. மென்மையையும் நவீனத்துவத்தையும் சிறப்பாகக் கலந்த இவரது இசை அமைப்பு, கேட்பவர்களை உடனடியாகப் பாடலுடன் ஒன்றச் செய்கிறது.
பாடலுக்கான காட்சிகளை ஈழவன் லக் (Eelavan Luck) எழுதி, இயக்கியுள்ளார். காதலை எளிய, ஆனால் ஆழமான காட்சி மொழியில் சொல்லி, இந்தப் படைப்பிற்கு சினிமாத்தன்மை அழகைச் சேர்த்துள்ளார்.
காதலின் நுண்ணிய உணர்வுகளை ரெயான் கோலா (Rheann Kolla) தனது நடிப்பால் தனித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார். வில் அண்ட் ஃபிலிம் (Will And Film) ஒளிப்பதிவு, காதல் தருணங்களை அழகிய காட்சிகளாக மாற்றி திரையில் மிளிரச் செய்கிறது.
ஜெரோன் பி மியூசிக் (Jerone B Music) தனது மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் மூலம் பாடலின் ஒலித் தரத்தை உயர்த்தி உள்ளது. ரெட் தி கலரிஸ்ட் (Red The Colorist) செய்த டிஐ (DI) பணிகள் காட்சிகளுக்கு உணர்வுபூர்வமான வண்ணங்களை வழங்கியுள்ளன.
எடிட்டிங், ஸ்டில்ஸ், டைட்டில் டிசைன், பப்லிசிட்டி டிசைன் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு, ஒரு முழுமையான இசை வீடியோ அனுபவத்தை உருவாக்கியுள்ளன.
'காதல் சத்தம்' பாடல் தற்போது யூடியூப் மற்றும் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. காதலை நேசிப்பவர்களுக்கு இந்தப் பாடல் நிச்சயம் அழகான இனிய இசைப் பயணமாக அமையும்.


Click it and Unblock the Notifications











