Vishal - திமிருக்கு பிறகு மார்க் ஆண்டனி வெற்றி.. அதனால் திமிர் கூடாது.. விஷாலை விளாசிய காமெடி நடிகர்
சென்னை: Vishal (விஷால்) சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டாம் என விஷால் கூறியதற்கு காமெடி நடிகர் காதல் சுகுமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட் படம் எது என்று கேட்டால் அவருக்கே நியாபகம் இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் அந்த நிலையை அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படம் மாற்றியிருக்கிறது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது. வசூலும் நூறு கோடி ரூபாய்வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஷால் கரியரில் அவரே எதிர்பார்க்காத வெற்றி மார்க் ஆண்டனி மூலம் கிடைத்திருக்கிறது.
சின்ன பட்ஜெட் படங்கள்: சூழல் இப்படி இருக்க மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஷால், இரண்டு கோடி ரூபாயிலிருந்து நான்கு கோடி ரூபாய்வரை பட்ஜெட்டை வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். சிறிய பட்ஜெட் படங்களை எடுத்தால் உங்களுக்கு சல்லிக்காசுக்கூட திரும்ப கிடைக்காது. 120 சிறிய பட்ஜெட் படங்கள் ஏற்கனவே வெளியாகாமல் காத்துக்கிடக்கின்றன. தயவு செய்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க வராதீர்கள்"என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
காதல் சுகுமார்: இந்நிலையில் காதல் படத்தில் நடித்த சுகுமார் டப்பாங்குத்து படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "சிறிய பட்ஜெட் படங்கள்தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. எனவே சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில் விஷால் பேசியபோது மூன்று கோடி ரூபாய், நான்கு கோடி ரூபாய் வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். அப்படி எடுக்கும் படங்கள் வெளியே வருவதில்லை என பேசினார்.
திமிரில் பேசுகிறார்: திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மார்க் ஆண்டனி படம் இப்போது வெற்றி பெற்றிருக்கிரது. அந்த திமிரால் விஷால் இப்படி பேசியிருக்கிறார். விஷாலின் பேச்சை கேட்டு படம் எடுக்க காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேர் பயந்துபோய் எனக்கு தெரிந்து படம் எடுக்காமல் திரும்பி சென்றுவிட்டனர். எனவே சின்ன பட்ஜெட் படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வர வேண்டாம் என அவர் பேசுவது தவறு" என்றார்.


Click it and Unblock the Notifications











