அவங்க இரண்டு பேரும் என்னை வாழவிடல… காதல் சுகுமார் உருக்கமான பேட்டி !

சென்னை : நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள் என்ற காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காதல் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்று, அதன் பிறகு விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்று தொடர்ந்து கமல்ஹாசன் படங்களில் நடித்துள்ளார்.

'காதல்' சுகுமார் தன் திரை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

kadhal sukumar Emotional interview about his cinema life

டைவ் அடித்தேன் :

விருமாண்டி படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் 'கொம்புல பூவ சுத்தி' பாடலில் கோரஸ் பாடினேன். மேலும், அந்தப் பாடல் ஷூட்டிங்கில் டைவ் அடிக்க ஆட்கள் வேண்டும் என்ற போது, நானே டைவ் அடித்தேன். ஆனால், படத்தில் அந்தக் காட்சியில் நான் இல்லை. அப்போது, கமல் சார் என்னிடம், உங்களுக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என்று அனைவரிடத்திலும், சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் பின் அனைத்து படத்திலும் உங்களை டைவ் அடிக்கச் சொல்லுவாங்க என்றார்.

கமல் அட்வைஸ் :

அதே போல வடிவேலு போல பல மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்ததால், என்னை சின்னத்திரை வடிவேலு என்ற பெயர் வந்தது. அப்போது, கமல் சார் தான், ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்றால், யாரைப்போலவும் மிமிக்ரி செய்து பார்க்கக்கூடாது என்று எனக்கு அறிவுரை கூறினார். அதன் பிறகுதான் மிமிக்ரி செய்வதை நிறுத்திவிட்டேன்.

kadhal sukumar Emotional interview about his cinema life

வாழவே விடவில்லை :

சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம், ஒரு பக்கம் விவேக் டீம் என இரண்டு டீம் இருந்துச்சி. என்னால இந்த பக்கமும் போகமுடியாது, அந்த பக்கமும் போகமுடியாது, ஆறு, சச்சின், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களில் கமிட்டாகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டு திரும்பி வந்து இருக்கிறேன். அவங்க ரெண்டு பேரும் என்னை வாழவே விடல, நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள்.

எல்லாத்துக்கும் சம்மதிக்கணும் :

ஆண்களுக்கே சினிமாவில் இந்த நிலைமை என்றால் கதாநாயகியாக வரும் பெண்களின் நிலைமை ரொம்ப மோசம், எல்லாத்திற்கும் சம்மதிக்க வேண்டும், இல்லை என்றால் படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பதால், பல நடிகைகள் பலவற்று வேறுவழியில்லாமல் ஓகே சொல்லிவிடுகிறார்கள் என்று காதல் சுகுமார் மனம் நொந்து பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X