Vishal: திமிரா பேசக் கூடாது.. விஷாலை வச்சு விளாசிய காதல் சுகுமார்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: திமிரு படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ஒரு படம் ஓடிவிட்டது என திமிராக பேசக் கூடாது விஷால் என காதல் சுகுமார் நடிகர் விஷாலை டைரக்ட் அட்டாக் செய்து பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தொடர்ந்து பல தோல்வி படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் 100 கோடி அளவு வசூல் நீட்டி இருப்பதாக கூறப்படும் நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று அமேசான் பிரைம் OTTயில் வெளியாகியுள்ளது.

Kadhal Sukumar slams Vishal for his latest speech against small budget producers

விஷால் பேச்சு: இந்நிலையில், அந்த படத்தின் வெற்றி பிரஸ்மீட்டில் பேசிய விஷால் 4 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம், அந்தப் படத்தை டெபாசிட் செய்து வைத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சினிமாவில் போட்டால் ஒரு பைசா கூட திரும்ப வராது எனக் கூறியிருந்தது பட்ஜெட் தயாரிப்பாளர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

பல சிறு தயாரிப்பாளர்கள் தங்கள் பட நிகழ்ச்சிகளின் போது நடிகர் விஷால் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், காதல் படத்தில் காமெடி நடிகராக நடித்த சுகுமார் தான் நடித்துள்ள டப்பாங்குத்து படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் விஷாலின் பேச்சை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

காதல் சுகுமார் விளாசல்: கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னணி நடிகர்களுக்கு 100 கோடி 200 கோடி சம்பளம் கொடுத்து வரும் நிலையில், நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு உதவுவது சிறு பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான் என்றும் நடிகர் விஷாலின் பேச்சைக் கேட்டு சில தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி ஓடி விட்டனர். அதனால் நான் உட்பட என் நண்பர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

Kadhal Sukumar slams Vishal for his latest speech against small budget producers

திமிரு படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு படம் ஓடிவிட்ட நிலையில், விஷால் திமிராக பேசக்கூடாது என கண்டித்துள்ளார் காதல் சுகுமார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும், சாமானியர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள், சினிமாவை நம்பி இங்கு பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது விஷாலுக்கு கொஞ்சம் கூட தெரியாதா? என்றும் விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X