மொரட்டு சிங்கிள்ஸ் உங்க படத்தலைப்பு ரிலீசாகிடுச்சு.. “காதலிக்க யாருமில்லை”!
ஜிவி பிரகாஷ் படத்திற்கு காதலிக்க யாருமில்லை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிக்கும் படத்திற்கு காதலிக்க யாருமில்லை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்படத்திற்கு காதலிக்க யாருமில்லை எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்கியது முதலே, 'இது மொரட்டு சிங்கிள்ஸ்-க்கான படம்' என படக்குழு விளம்பரப் படுத்தி வருகிறது.
நாயகனாக மட்டுமின்றி, இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ் தான். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி போல், கை நிறைய படங்களுடன் பிசியாக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் தான்.
இப்படம் தவிர அவர், காதல் 100 சதவீதம், குப்பத்து ராஜா, ஜெயில், வாட்ச்மேன் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சர்வம் தாளமயம் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











