Nithya Menen: மிஷ்கினிடம் பீரியட்ஸ் பற்றிக் கூறிய நித்யா மேனன்.. உதயநிதி படத்தில் நடைபெற்ற சம்பவம்!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான மற்றும் கவனம் பெறும் நடிகையாக உள்ளார். இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள படமான 'காதலிக்க நேரமில்லை’ படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பல்வேறு சேனல்களுக்கு நித்யா மேனன் பேட்டி அளித்து வருகின்றார். அப்போது அவர் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் குறித்து கூறியுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை நித்யா மேனன், தற்போது தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்தில் அவருடன் நடித்து வருகின்றார். படம் மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே தனுஷ் உடன் இணைந்து நடித்த படமான திருச்சிற்றம்பலம் படத்தில், சோபனா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இந்திய அரசு அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினை வழங்கியது.

nithya menen mysskin kadhalikka neramillai

நித்யா மேனனைப் பொறுத்துவரையில் தென்னிந்திய சினிமாவில் இருக்ககூடிய ஆகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். நித்யா மேனன் ஒரு படத்தில் கமிட் ஆகின்றார் என்றாலே, அந்த படத்தின் கதை அல்லது திரைக்கதை சுவாரஸ்யமானதாகவோ அல்லது அவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தம் உடையதாகவோ இருக்கும் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு தனது கதைத்தேர்வுகள் மூலம் உயர்ந்து நிற்கின்றார். நித்யா மேனன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒன்றில் இருந்து மற்றொன்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என கடுமையாக உழைக்கின்றார் என்பதை அவரது நடிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

நித்யா மேனன்: காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்கும்போது கூட, ஒரு டேக்கில் நடித்தது போதுமானதாக இல்லை, என நினைத்து ரீ டேக் சொன்னால், அதே காட்சியை வேறுமாதிரி நடித்துக் காட்டுவாராம். அதுவும் திருப்திகரமாக இல்லை என்றால், இயக்குநரை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டுவிடுவாராம். இது தொடர்பாக காதலிக்க நேரமில்லை படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி கூறும்போது, 'நித்யா மேனன் அதிகம் டேக்குகள் வாங்க மாட்டார். மேக்ஸிமம் மூன்று டேக்குகள்தான். அவரிடன் ஒரு காட்சி எனக்கு இப்படி வேண்டும் எனச் சொல்லுவதற்கு முதலில் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மிஷ்கின்: நித்யா மேனன் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த படம், சைக்கோ, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்தார். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நித்யா மேனன், விபத்தினால் கால்களை இழந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று செம ஹிட் படமாக மாறியது.

பீரியட்ஸ்: படத்தில் நித்யா மேனனின் நடிப்பினைப் பார்த்து மிஷ்கின், நித்யா மேனன் நடிப்பில் ஒரு பிசாசு மாதிரி என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படியான நிலையில், பேட்டி ஒன்றில் நித்யா மேனன் பிசாசு படத்தில் நடித்தபோது, நடைபெற்ற சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, ”சைக்கோ படத்தின் படப்பிடிப்பில் நான் முதல் நாள் கலந்து கொள்கின்றேன். அப்போது எனக்கு பிரீயட்ஸ் என மிஷ்கினிடம் கூறினேன். நான் முதன் முதலில் எனக்கு பீரியட்ஸ் என ஒரு ஆண் இயக்குநரிடம் அப்போதுதான் கூறுகின்றேன். நான் சொன்னதைக் கேட்டதும், முதல் நாளா? நீ ரெஸ்ட் எடு, கிளம்பு என உடனே என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்” எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X