அனிருத்தே அப்பாலே போ.. காதலிக்க நேரமில்லை படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாட்ட கேட்டீங்களா?

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அந்தப் பாடலின் சில நொடிகளை கேட்டதுமே ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகிவிட்டனர்.

இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காத நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு அனிருத்தை சோசியல் மீடியா முழுவதும் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

AR Rahman Jayam Ravi Nithya Menon Kiruthika Udhayanidhi Kadhalikka Neramillai

இந்தியன் தாத்தாவே பேசுவது போன்ற ஏஐ வீடியோக்களை கூட வெளியிட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் போட்டிருந்தால் மட்டும் பாட்டு சூப்பரா வந்திருக்குமா? என சில அனிருத் ரசிகர்கள் முட்டுக் கொடுக்க அவர்களுக்கு தலையில் நறுக்கென குட்டு வைத்திருக்கிறார் 6க்கு அப்புறம் 7வன்டா ரஹ்மானுக்கு அப்புறம் எவன்டான்னு!

கிருத்திகா உதயநிதி படைப்பு: உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அவர் இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், கருணாகரன் உள்ளிட்ட பலர் அந்த வெப்சிரீஸில் நடித்திருந்தனர். ஆபாச வார்த்தைகள், சைக்கோ த்ரில்லர், போலீஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் வெப்சீரிஸ்களுக்கு நடுவே அழகாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரின் அழகை ரம்மியமாக காட்டி தற்கொலை எண்ணத்துக்கு எதிரான அற்புத படைப்பாக பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார்.

காதலிக்க நேரமில்லை: ஜி.வி. பிரகாஷ், ரைசா வில்சன் நடிப்பில் காதலிக்க யாரும் இல்லை திரைப்படம் உருவாகி வருகிறது. ரவிச்சந்திரன், முத்துராமன் மற்றும் நாகேஷ் நடித்து வெளியான எவர்கிரீன் ஹிட் திரைப்படம் காதலிக்க நேரமில்லை படத்தின் தலைப்பை அப்படியே வைத்து ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை நடிக்க வைத்து உருவாக்கியுள்ள படம் விரைவில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை தெறிக்குது: தற்போது அந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு “தாத்தா வராரு” பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், காதல் பொங்க சூப்பரான பாடலை தலைவன் ஏ.ஆர். ரஹ்மான் போட்டுள்ளார் வந்து கேளுங்க என ரசிகர்கள் அந்த பாடல் க்ளிம்ப்ஸ் வீடியோவை ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

எவ்ளோ நாள் ஆச்சு இப்படி பார்த்து?: சைரன் படத்தின் ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாற்றி நடிக்க வைத்திருந்தனர். அவர் இப்பவும் ரொமாண்டிக் பாயாக நடிக்கலாம் என அழகாக அவரையும் திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு நித்யா மேனனையும் ஊஞ்சலில் ஆடவைத்து வீடியோவை வெளியிட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி.

அந்த படத்தின் பெயரை காப்பாற்றுவாரா?: 1964ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தை இப்போ தியேட்டரில் ரிலீஸ் செய்தாலும் பார்க்க கூட்டம் வரும். அந்தளவுக்கு சூப்பரான காமெடி படம் பாலய்யாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் அந்த காட்சிக்கு இணையாக இன்னொரு காமெடி காட்சி வருமா என்பதே சந்தேகம். அந்த படத்தின் பெயரை காப்பாற்றுவார் கிருத்திகா உதயநிதி என ரசிகர்கள் நம்புகின்றனர். ஜெயம் ரவி ஹீரோவாக கம்பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X